• Nov 17 2024

கிளிநொச்சியில் 30 ஆம் திகதி மாபெரும் போராட்டம்; காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி ஒன்றிணைய உறவுகள் அழைப்பு!

Tamil nila / Aug 28th 2024, 10:22 pm
image

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் அவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தருமாறு வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்படோரின் உறவுகள் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி அழைப்பு விடுத்துள்ளார். 

நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகசந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளை மறுதினம்  30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்படுகிறது. 

வடக்கு கிழக்கிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரும் பொது அமைப்புக்களும் பல்வேறு பட்டவர்களும் இந்த தினத்தை அடையாளப்படுத்த முனைப்பு காட்டி வருகின்றார்கள். அன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஒரு முக்கிய தினமாகும். ஏனென்றால்  அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு தினம். 

நாங்கள் 2009 ல் அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி கையளித்தும்  சரணடைந்தும்  விசாரணைக்கென கூட்டி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 2009 இலிருந்து அரச கட்டுப்பாட்டில் வெள்ளை வான்களில்  கடத்தப்பட்டவர்கள், வீட்டிலிருந்து கூட்டி செல்லப்பட்டவர்கள்,  இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டவர்கள் என அத்தனை கடத்தப்பட்ட உறவுகளும் அந்தந்த மாவட்டங்களில் தனித்தனியாக ஒவ்வொரு போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரங்களிலே  பதிலோ எதுவித முடிவுகளையோ  எவரும் தந்திருக்கவில்லை. 

நாமும் கிளிநொச்சி மாவட்டத்திலே இந்த போராட்டத்தினை அடையாள உண்ணாவிரத போராட்டமாகவும் மாதத்துக்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு தடவையோ இந்த போராட்டத்தை நடத்துவதும்  பின்பு வாழாதிருப்பதுமாக காலம் கடத்தப்பட்டது.

எந்த அரசியல் வாதியோ அல்லது எந்த பொது அமைப்போ எங்களுக்கு எந்த தீர்வையும் பெற்றுத்தருவதற்கு முன்வரவில்லை. 

மாதத்துக்கு ஒரு தடவையோ இருதடவையோ அவர்களின் அனுசரணையுடன் இந்த போராட்டங்களை மட்டும் ஈடுபடுத்தி நடந்து கொண்டிருந்த நேரத்திலே 2017 ஆம் ஆண்டு தாய் மாதம் 5 ஆம் திகதி கிளிநொச்சியில் பெரு அளவில் கூடிய இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒரு பொதுக்கூட்டம் ஒன்று வைத்து நாம் இந்த போராட்டத்தை ஒரு தொடர் போராட்டமாக நடத்த வேண்டும் என்று  முடிவெடுத்தோம். 

கிளிநொச்சி வாழ் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எண்ணத்திலே உருவாகிய இந்த கருவானது  பெப்ரவரி 20 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டு தொடர் கவனயீர்ப்பு போராட்டமாக உருவெடுத்தது. 

அந்த உருவெடுத்த நேரத்திலே தலைவியாக யோகராஜா கனகரஞ்சினியும், செயலாளராக லீலாதேவி ஆனந்தராஜா ஆகிய நானும் செயல்பட்டு அந்த போராட்டத்தை ஒழுங்கான முறையிலே நடத்தி வந்து கொண்டிருந்தோம். அந்த நேரத்திலே அதற்குரிய லோகோ, அதற்குரிய கடித தலைப்பு யாவும்  என்னால் உருவாக்கப்பட்டு அது தற்போதும் பாவிக்கப்பட்டு வருகின்றது. 

அந்த போராட்டமானது எந்த வித அரசியல் தலையீடும், எந்த வித அமைப்புக்களின் உள்வாங்கல் எதுவும்  இன்றி அனைவரது ஒத்துழைப்புடன் அதாவது அரசியல் வாதிகளின் அனுசரணையை பெற்றோமே தவிர எல்லோரது ஒத்துழைப்புடனும் மிக பாரிய போராட்டங்களை நடாத்தி இன்றைய தினம் ஜெனீவா வரையும், சர்வதேசங்கள் வரையும் கொண்டு செல்வதற்கு அந்த கிளிநொச்சியில் அமைந்த போராட்டங்கள் காரணமாக அமைந்தது.

கிளிநொச்சியில் 20.02. 2017 இல் தொடங்கப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து வவுனியாவில் 5 நாட்களின் பின்பும் பின்னர் ஒரு மாதத்தின் பின்பு முல்லைத்தீவில் பின் படிப்படியாக மருதங்கேணி, திருகோணமலையில் இந்த போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. 

இந்த போராட்டம் தொடங்கிய கிளிநொச்சி மாவட்டத்திலே காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினத்தை இந்த முறை நாங்கள் அனுஷ்டிக்க இருக்கின்றோம். வடக்கு கிழக்கில் வெவ்வேறு இடங்களில் நடைபெற இருக்கினர் திருகோணமலை, யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கின்றது, வவுனியாவில் நடைபெற இருக்கின்றது. இந்த போராட்டத்தை கிளிநொச்சியில் ஏற்பாடு செய்ததற்கான முக்கியமான காரணம் கிளிநொச்சியில் தான் இந்த போராட்டம் கருக்கொண்டது. கிளிநொச்சியில் தான் இந்த போராட்டம் சர்வதேசத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டதன் முக்கிய காரணமாக அமைந்தது. 

கிளிநொச்சியில் நடந்த போராட்டத்தை எவரும் மறந்திருக்க முடியாது. ஏனென்றால் அவ்வளவு எழுச்சியுடன் நடைபெற்ற போராட்டங்கள். A9 வீதியை மறிப்பு செய்து ஜனாதிபதியை சந்திக்க வைத்த இடமும் இந்த கிளிநொச்சி. எனவே தான் இந்த போராட்டத்தை கிளிநொச்சியில் நடத்த வேண்டும் என்று தீர்மானம் எடுத்தோம் எனத் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் 30 ஆம் திகதி மாபெரும் போராட்டம்; காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி ஒன்றிணைய உறவுகள் அழைப்பு காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் அவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தருமாறு வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்படோரின் உறவுகள் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி அழைப்பு விடுத்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகசந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளை மறுதினம்  30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரும் பொது அமைப்புக்களும் பல்வேறு பட்டவர்களும் இந்த தினத்தை அடையாளப்படுத்த முனைப்பு காட்டி வருகின்றார்கள். அன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஒரு முக்கிய தினமாகும். ஏனென்றால்  அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு தினம். நாங்கள் 2009 ல் அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி கையளித்தும்  சரணடைந்தும்  விசாரணைக்கென கூட்டி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 2009 இலிருந்து அரச கட்டுப்பாட்டில் வெள்ளை வான்களில்  கடத்தப்பட்டவர்கள், வீட்டிலிருந்து கூட்டி செல்லப்பட்டவர்கள்,  இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டவர்கள் என அத்தனை கடத்தப்பட்ட உறவுகளும் அந்தந்த மாவட்டங்களில் தனித்தனியாக ஒவ்வொரு போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரங்களிலே  பதிலோ எதுவித முடிவுகளையோ  எவரும் தந்திருக்கவில்லை. நாமும் கிளிநொச்சி மாவட்டத்திலே இந்த போராட்டத்தினை அடையாள உண்ணாவிரத போராட்டமாகவும் மாதத்துக்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு தடவையோ இந்த போராட்டத்தை நடத்துவதும்  பின்பு வாழாதிருப்பதுமாக காலம் கடத்தப்பட்டது.எந்த அரசியல் வாதியோ அல்லது எந்த பொது அமைப்போ எங்களுக்கு எந்த தீர்வையும் பெற்றுத்தருவதற்கு முன்வரவில்லை. மாதத்துக்கு ஒரு தடவையோ இருதடவையோ அவர்களின் அனுசரணையுடன் இந்த போராட்டங்களை மட்டும் ஈடுபடுத்தி நடந்து கொண்டிருந்த நேரத்திலே 2017 ஆம் ஆண்டு தாய் மாதம் 5 ஆம் திகதி கிளிநொச்சியில் பெரு அளவில் கூடிய இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒரு பொதுக்கூட்டம் ஒன்று வைத்து நாம் இந்த போராட்டத்தை ஒரு தொடர் போராட்டமாக நடத்த வேண்டும் என்று  முடிவெடுத்தோம். கிளிநொச்சி வாழ் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எண்ணத்திலே உருவாகிய இந்த கருவானது  பெப்ரவரி 20 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டு தொடர் கவனயீர்ப்பு போராட்டமாக உருவெடுத்தது. அந்த உருவெடுத்த நேரத்திலே தலைவியாக யோகராஜா கனகரஞ்சினியும், செயலாளராக லீலாதேவி ஆனந்தராஜா ஆகிய நானும் செயல்பட்டு அந்த போராட்டத்தை ஒழுங்கான முறையிலே நடத்தி வந்து கொண்டிருந்தோம். அந்த நேரத்திலே அதற்குரிய லோகோ, அதற்குரிய கடித தலைப்பு யாவும்  என்னால் உருவாக்கப்பட்டு அது தற்போதும் பாவிக்கப்பட்டு வருகின்றது. அந்த போராட்டமானது எந்த வித அரசியல் தலையீடும், எந்த வித அமைப்புக்களின் உள்வாங்கல் எதுவும்  இன்றி அனைவரது ஒத்துழைப்புடன் அதாவது அரசியல் வாதிகளின் அனுசரணையை பெற்றோமே தவிர எல்லோரது ஒத்துழைப்புடனும் மிக பாரிய போராட்டங்களை நடாத்தி இன்றைய தினம் ஜெனீவா வரையும், சர்வதேசங்கள் வரையும் கொண்டு செல்வதற்கு அந்த கிளிநொச்சியில் அமைந்த போராட்டங்கள் காரணமாக அமைந்தது.கிளிநொச்சியில் 20.02. 2017 இல் தொடங்கப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து வவுனியாவில் 5 நாட்களின் பின்பும் பின்னர் ஒரு மாதத்தின் பின்பு முல்லைத்தீவில் பின் படிப்படியாக மருதங்கேணி, திருகோணமலையில் இந்த போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டம் தொடங்கிய கிளிநொச்சி மாவட்டத்திலே காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினத்தை இந்த முறை நாங்கள் அனுஷ்டிக்க இருக்கின்றோம். வடக்கு கிழக்கில் வெவ்வேறு இடங்களில் நடைபெற இருக்கினர் திருகோணமலை, யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கின்றது, வவுனியாவில் நடைபெற இருக்கின்றது. இந்த போராட்டத்தை கிளிநொச்சியில் ஏற்பாடு செய்ததற்கான முக்கியமான காரணம் கிளிநொச்சியில் தான் இந்த போராட்டம் கருக்கொண்டது. கிளிநொச்சியில் தான் இந்த போராட்டம் சர்வதேசத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டதன் முக்கிய காரணமாக அமைந்தது. கிளிநொச்சியில் நடந்த போராட்டத்தை எவரும் மறந்திருக்க முடியாது. ஏனென்றால் அவ்வளவு எழுச்சியுடன் நடைபெற்ற போராட்டங்கள். A9 வீதியை மறிப்பு செய்து ஜனாதிபதியை சந்திக்க வைத்த இடமும் இந்த கிளிநொச்சி. எனவே தான் இந்த போராட்டத்தை கிளிநொச்சியில் நடத்த வேண்டும் என்று தீர்மானம் எடுத்தோம் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement