• May 13 2024

பாரியளவு அழுகிய முட்டைகள் மீட்பு! இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையா..! samugammedia

Chithra / Jul 24th 2023, 2:55 pm
image

Advertisement

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முத்திரை அகற்றப்பட்டு சந்தைக்கு விநியோகிப்பதற்காக தயாராக இருந்த களஞ்சியசாலை ஒன்றை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று (23)  சோதனையிட்டனர். 

குறித்த களஞ்சியசாலை தும்மலசூரிய எதுங்கஹகொடுவ பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் திகதி குறித்த முத்திரை நீக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி நேற்று இரவு குறித்த களஞ்சியசாலை அமைந்துள்ள தும்மலசூரிய அதுங்கஹகொடுவ பிரதேசத்திற்கு அவர்கள் சென்றுள்ளனர்.

அங்கு நுகர்வுக்கு பொறுத்தமட்டிருந்த சுமார் 100 பெட்டி முட்டைகள் கண்டறியப்பட்டன.

முட்டை விற்பனையாளரிடம் நடத்திய விசாரணையில், முகநூல் பக்கத்தின் மூலம் பெறப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு இந்திய முட்டைகளை பெற்று, முத்திரைகளை அகற்றி சந்தைக்கு விநியோகிக்க தயாரானதாக தெரிவித்திருந்தார்.

ஒரு முட்டையின் முத்திரையை அழிக்க 4 ரூபாய் செலவாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.

மீட்கப்பட்ட முட்டைகளை பரிசோதித்த போது அவை நுகர்வுக்கு உதவாத நிலையில் காணப்பட்டதுடன் சில முட்டைகள் கல்லாகி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விற்பனையாளரிடம் இருந்து முட்டைகளை கொள்வனவு செய்து கொழும்பு பிரதேசத்திற்கு விற்பனைக்காக கொண்டு சென்ற சில இளைஞர்கள் கடைகார்களால் துாற்றப்பட்டதுடன் தாக்குதலுக்கும் இலக்கானதாக தெரிவித்துள்ளனர்.


பாரியளவு அழுகிய முட்டைகள் மீட்பு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையா. samugammedia இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முத்திரை அகற்றப்பட்டு சந்தைக்கு விநியோகிப்பதற்காக தயாராக இருந்த களஞ்சியசாலை ஒன்றை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று (23)  சோதனையிட்டனர். குறித்த களஞ்சியசாலை தும்மலசூரிய எதுங்கஹகொடுவ பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் திகதி குறித்த முத்திரை நீக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.அதன்படி நேற்று இரவு குறித்த களஞ்சியசாலை அமைந்துள்ள தும்மலசூரிய அதுங்கஹகொடுவ பிரதேசத்திற்கு அவர்கள் சென்றுள்ளனர்.அங்கு நுகர்வுக்கு பொறுத்தமட்டிருந்த சுமார் 100 பெட்டி முட்டைகள் கண்டறியப்பட்டன.முட்டை விற்பனையாளரிடம் நடத்திய விசாரணையில், முகநூல் பக்கத்தின் மூலம் பெறப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு இந்திய முட்டைகளை பெற்று, முத்திரைகளை அகற்றி சந்தைக்கு விநியோகிக்க தயாரானதாக தெரிவித்திருந்தார்.ஒரு முட்டையின் முத்திரையை அழிக்க 4 ரூபாய் செலவாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.மீட்கப்பட்ட முட்டைகளை பரிசோதித்த போது அவை நுகர்வுக்கு உதவாத நிலையில் காணப்பட்டதுடன் சில முட்டைகள் கல்லாகி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விற்பனையாளரிடம் இருந்து முட்டைகளை கொள்வனவு செய்து கொழும்பு பிரதேசத்திற்கு விற்பனைக்காக கொண்டு சென்ற சில இளைஞர்கள் கடைகார்களால் துாற்றப்பட்டதுடன் தாக்குதலுக்கும் இலக்கானதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement