பாடசாலை மட்டத்தில் ஜப்பான் மொழி தேர்ச்சி!

பாடசாலை மட்டத்தில் ஜப்பான் மொழித் தேர்ச்சி வழங்கலை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மற்றும் ஜப்பான் அரசாங்கங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 14 தொழில் துறைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இயலுமை இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 5 வருடங்களில் விசேட நிபுணத்துவ வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 3 இலட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த, தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கு ஜப்பான் மொழித்தேர்ச்சி கட்டாய தகைமையாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனை கருத்தில் கொண்டு பாடசாலைகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் தொழில்நுட்பவியல் பாடவிதானத்தின் கீழ் ஜப்பான் மற்றும் ஆங்கில மொழிகளை கற்பிக்கும் நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை