• Nov 19 2024

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா- பக்தர்கள் பக்தி பூர்வமாக வழிபாடு!

Tamil nila / Aug 4th 2024, 3:07 pm
image

வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இன்று அதிகாலை மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதரராகவும், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து நகுலேஸ்வரர் சமேதர நகுலாம்பிகை, விநாயகர் மற்றும் முருகப்பொருமான் வள்ளி தெய்வயானையுடனும், கீரிமலை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து முத்துமாரி அம்மனும் எழுந்தருளி கீரிமலை புனித கண்டகி தீர்த்தத்தில் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.



25 நாட்கள் கொண்ட ஆலய மகோஉற்சவத்தில் இன்று இடம்பெற்ற தீர்த்த திருவிழாவுடன் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.



ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழாவில் இலங்கையின் பல பாகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பூர்வமாக கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.



மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா- பக்தர்கள் பக்தி பூர்வமாக வழிபாடு வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.இன்று அதிகாலை மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதரராகவும், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து நகுலேஸ்வரர் சமேதர நகுலாம்பிகை, விநாயகர் மற்றும் முருகப்பொருமான் வள்ளி தெய்வயானையுடனும், கீரிமலை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து முத்துமாரி அம்மனும் எழுந்தருளி கீரிமலை புனித கண்டகி தீர்த்தத்தில் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.25 நாட்கள் கொண்ட ஆலய மகோஉற்சவத்தில் இன்று இடம்பெற்ற தீர்த்த திருவிழாவுடன் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழாவில் இலங்கையின் பல பாகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பூர்வமாக கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

Advertisement

Advertisement

Advertisement