• May 08 2024

யாருக்கு என்னென்ன விருது? விருதை அள்ளிய மெஸ்ஸி

crownson / Dec 19th 2022, 10:37 am
image

Advertisement

கட்டார் உலகக் கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய லயோனல் மெஸ்ஸி,மொத்தம் 7 கோல்கள் அடித்தார்.

அத்துடன்,  உலகக் கோப்பை வரலாற்றில் லீக் சுற்றுஇ நாக்-அவுட், காலிறுதி, அரையிறுதி,  இறுதிப் போட்டி என அனைத்து சுற்றுகளிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

குறிப்பாக,  உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

இதன் மூலம், கட்டார் உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான தங்கப் பதக்கத்தை வென்றார்.

மேலும், சாம்பியன் கோப்பை, தங்கப் பதக்கம் உட்பட 3 தங்கத்தை உச்சி முகர்ந்தார்.

மேலும், 2014-ஐ தொடர்ந்து இரண்டாவது முறை GOLDEN BALL  விருதை முத்தமிட்டார்.

இறுதிப் போட்டியில் தனியாளாக போராடிய பிரான்ஸ் வீரர் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டினார்.

அந்த வகையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெப் ஹர்ஸ்ட்-க்கு அடுத்து இறுதிப் போட்டியில் இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரராக ஜொலித்தார்.

இத்தொடரில், மொத்தம் 8 கோல்கள் அடித்து, 'தங்க காலணி' விருதை எம்பாப்பே வென்றார்.

தனிப்பட்ட வீரராக சாதித்த போதும், பிரான்ஸ் அணி வெற்றி பெறாததால், அவரால் அதை கொண்டாட முடியாமல் போனது.

கட்டார் உலகக் கோப்பையில் அரண் போல் செயல்பட்டு, அர்ஜென்டினாவை கரை சேர்த்த அந்த அணியின் மார்டினெஸ் சிறந்த கோல் கீப்பருக்கான 'தங்க கையுறை' விருதை வென்றார்.

மேலும், அஜென்டினாவின் 21 வயதான என்சோ பெர்னாண்டஸ்-க்கு (Enzo Fernández) சிறந்த இளம் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றதுடன், மெஸ்ஸி, மார்டினெஸ் மற்றும் பெர்னாண்டஸ் ஆகிய 3 பேர் சிறந்த வீரர்களுக்கான விருது வென்றதை அந்நாட்டு ரசிகர்கள் பெருமிதத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

யாருக்கு என்னென்ன விருது விருதை அள்ளிய மெஸ்ஸி கட்டார் உலகக் கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய லயோனல் மெஸ்ஸி,மொத்தம் 7 கோல்கள் அடித்தார். அத்துடன்,  உலகக் கோப்பை வரலாற்றில் லீக் சுற்றுஇ நாக்-அவுட், காலிறுதி, அரையிறுதி,  இறுதிப் போட்டி என அனைத்து சுற்றுகளிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.குறிப்பாக,  உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற சாதனையும் படைத்தார். இதன் மூலம், கட்டார் உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும், சாம்பியன் கோப்பை, தங்கப் பதக்கம் உட்பட 3 தங்கத்தை உச்சி முகர்ந்தார். மேலும், 2014-ஐ தொடர்ந்து இரண்டாவது முறை GOLDEN BALL  விருதை முத்தமிட்டார்.இறுதிப் போட்டியில் தனியாளாக போராடிய பிரான்ஸ் வீரர் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டினார். அந்த வகையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெப் ஹர்ஸ்ட்-க்கு அடுத்து இறுதிப் போட்டியில் இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரராக ஜொலித்தார்.இத்தொடரில், மொத்தம் 8 கோல்கள் அடித்து, 'தங்க காலணி' விருதை எம்பாப்பே வென்றார். தனிப்பட்ட வீரராக சாதித்த போதும், பிரான்ஸ் அணி வெற்றி பெறாததால், அவரால் அதை கொண்டாட முடியாமல் போனது.கட்டார் உலகக் கோப்பையில் அரண் போல் செயல்பட்டு, அர்ஜென்டினாவை கரை சேர்த்த அந்த அணியின் மார்டினெஸ் சிறந்த கோல் கீப்பருக்கான 'தங்க கையுறை' விருதை வென்றார். மேலும், அஜென்டினாவின் 21 வயதான என்சோ பெர்னாண்டஸ்-க்கு (Enzo Fernández) சிறந்த இளம் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றதுடன், மெஸ்ஸி, மார்டினெஸ் மற்றும் பெர்னாண்டஸ் ஆகிய 3 பேர் சிறந்த வீரர்களுக்கான விருது வென்றதை அந்நாட்டு ரசிகர்கள் பெருமிதத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement