• May 18 2024

வடக்குக் கிழக்கில் கடும் மழை - 4 நாட்களுக்கு மக்களே அவதானம்

harsha / Dec 19th 2022, 10:31 am
image

Advertisement

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படுவதால் எதிர்வரும், நான்கு தினங்கள் மழையும் பலமான காற்றும் வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது வங்காள விரிகுடாவில் உருவாகி வருகின்ற தாழமுக்கம் காரணமாக இன்று முதல் வியாழக்கிழமை  அதிகளவான மழைவீழ்ச்சியும் பலத்த காற்றும் வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் இவ்விடயத்தில் மிக அவதானமாக இருப்பதுடன் தங்களுடைய கால்நடைகளை இக்காலப் பகுதிகளில் மிகவும் அவதானமாக பராமரிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்கும்படியும் அல்லது அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

வடக்குக் கிழக்கில் கடும் மழை - 4 நாட்களுக்கு மக்களே அவதானம் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படுவதால் எதிர்வரும், நான்கு தினங்கள் மழையும் பலமான காற்றும் வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தற்போது வங்காள விரிகுடாவில் உருவாகி வருகின்ற தாழமுக்கம் காரணமாக இன்று முதல் வியாழக்கிழமை  அதிகளவான மழைவீழ்ச்சியும் பலத்த காற்றும் வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே மக்கள் இவ்விடயத்தில் மிக அவதானமாக இருப்பதுடன் தங்களுடைய கால்நடைகளை இக்காலப் பகுதிகளில் மிகவும் அவதானமாக பராமரிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.அத்துடன் கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்கும்படியும் அல்லது அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement