• May 07 2024

மெஸ்ஸிக்கு அரசர்களுக்கான தங்க உடை- கத்தார் கௌரவம்!

Sharmi / Dec 19th 2022, 10:30 am
image

Advertisement

கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்றையதினம் நிறைவடைந்தது.

இந்நிலையில் நேற்றைய இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்று கத்தார் உலக கிண்ணத்தை தன்வசமாக்கியது.

இந்நிலையில் அர்ஜென்டினா அணியின் கேப்டனும் உலக அளவில் அறியப்படும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸிக்கு சாம்பியன் கோப்பையை கையளிக்கும் முன்னர் கத்தார் ஆட்சியாளரும் ஃபிஃபா தலைவரும் இணைந்து bisht  எனப்படும் அரேபிய பாரம்பரிய உடை ஒன்றை அணிவித்துள்ளனர்.


இந்த நிலையில் மெஸ்ஸி அணிந்துகொண்ட அந்த உடையின் சிறப்பு மற்றும் அதை யார் யார் அணிந்துகொள்வார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. bisht எனப்படும் அரேபிய பாரம்பரிய உடையானது தங்க இழைகளால் உருவாக்கியுள்ளனர். அத்துடன் கத்தார் உலகக் கோப்பையின் வண்ணத்திலும் அதை தைத்துள்ளனர்.

மட்டுமின்றி மகத்தான கௌரவத்தின் அடையாளமாக குறித்த அங்கி அணியப்படுகிறது. அரேபிய நாடுகளில் அரசர்கள், உயர் பொறுப்பில் இருக்கும் இமாம்கள், அமீர்கள் உட்பட முதன்மையான நபர்கள் முக்கிய தருணங்களில் இந்த உடையை அணிவதுண்டு.

உலகக் கோப்பை கொண்டாட்டங்களின் உத்தியோகப்பூர்வ நிமிடங்களில் மொத்தமும் மெஸ்ஸி அரசர்களுக்கான அந்த சிறப்பு உடையிலேயே காணப்பட்டார். மட்டுமின்றி  bisht  உடையில் மெஸ்ஸியை காண நேர்ந்த கத்தார் மற்றும் அரேபிய மக்கள் பெருமையுடன் நன்றி தெரிவிக்கவும் பாராட்டவும் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மெஸ்ஸிக்கு அரசர்களுக்கான தங்க உடை- கத்தார் கௌரவம் கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்றையதினம் நிறைவடைந்தது.இந்நிலையில் நேற்றைய இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்று கத்தார் உலக கிண்ணத்தை தன்வசமாக்கியது.இந்நிலையில் அர்ஜென்டினா அணியின் கேப்டனும் உலக அளவில் அறியப்படும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸிக்கு சாம்பியன் கோப்பையை கையளிக்கும் முன்னர் கத்தார் ஆட்சியாளரும் ஃபிஃபா தலைவரும் இணைந்து bisht  எனப்படும் அரேபிய பாரம்பரிய உடை ஒன்றை அணிவித்துள்ளனர்.இந்த நிலையில் மெஸ்ஸி அணிந்துகொண்ட அந்த உடையின் சிறப்பு மற்றும் அதை யார் யார் அணிந்துகொள்வார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. bisht எனப்படும் அரேபிய பாரம்பரிய உடையானது தங்க இழைகளால் உருவாக்கியுள்ளனர். அத்துடன் கத்தார் உலகக் கோப்பையின் வண்ணத்திலும் அதை தைத்துள்ளனர்.மட்டுமின்றி மகத்தான கௌரவத்தின் அடையாளமாக குறித்த அங்கி அணியப்படுகிறது. அரேபிய நாடுகளில் அரசர்கள், உயர் பொறுப்பில் இருக்கும் இமாம்கள், அமீர்கள் உட்பட முதன்மையான நபர்கள் முக்கிய தருணங்களில் இந்த உடையை அணிவதுண்டு.உலகக் கோப்பை கொண்டாட்டங்களின் உத்தியோகப்பூர்வ நிமிடங்களில் மொத்தமும் மெஸ்ஸி அரசர்களுக்கான அந்த சிறப்பு உடையிலேயே காணப்பட்டார். மட்டுமின்றி  bisht  உடையில் மெஸ்ஸியை காண நேர்ந்த கத்தார் மற்றும் அரேபிய மக்கள் பெருமையுடன் நன்றி தெரிவிக்கவும் பாராட்டவும் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement