இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று (17) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்திய நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகளுடனும் பிரதமர் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஹரிணி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர், தனது எக்ஸ் தள பக்கத்தில் இலங்கை பிரதமரை புது டெல்லியில் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியா, இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பது மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று இரு நாட்டு பிரதமர்களின் சந்திப்பும் மிக முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் ஹரிணி - பிரதமர் மோடி இடையே இன்று சந்திப்பு இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று (17) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்திய நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகளுடனும் பிரதமர் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஹரிணி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர், தனது எக்ஸ் தள பக்கத்தில் இலங்கை பிரதமரை புது டெல்லியில் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்று பதிவிட்டுள்ளார். இந்தியா, இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பது மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் இன்று இரு நாட்டு பிரதமர்களின் சந்திப்பும் மிக முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகின்றது.