அதிகளவிலான பயனர்களால் பயன்படுத்தப்படும் ட்விட்டர் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா "திரெட்ஸ்" என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டுவிட்டரில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதாவது பிரத்யேக சேவைகளுக்கான சந்தா கட்டணம், அங்கீகரிக்கப்பட்டாத பயனர்கள் நாளொன்றுக்கு 1,000 பதிவுகள் மட்டும் பார்க்க முடியுமென அண்மையில் எலன் மஸ்க் கட்டுப்பாடுகள் விதித்தது பயனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ட்விட்டருக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட தளங்களான புளூஸ்கை, மாஸ்டோடான் போன்றே, திரெட்ஸ் சேவையும் பரவலான சமூக வலைதளமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, வெளியான ஸ்கிரீன்ஷாட்களின் படி திரெட்ஸ் சேவை தோற்றத்தில் இன்ஸ்டாகிராம் போன்றும், பயன்பாடுகள் அனைத்தும் ட்விட்டர் போன்றிருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த செயலி இன்ஸ்டாகிராம் கணக்கு விவரங்களை கொண்டு தானாகவே ப்ரோபைலை உருவாக்கும் என கூறப்படுகிறது.
ட்விட்டருக்கு போட்டியாக வரும் மெட்டாவின் "திரெட்ஸ்" செயலி samugammedia அதிகளவிலான பயனர்களால் பயன்படுத்தப்படும் ட்விட்டர் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா "திரெட்ஸ்" என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.டுவிட்டரில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதாவது பிரத்யேக சேவைகளுக்கான சந்தா கட்டணம், அங்கீகரிக்கப்பட்டாத பயனர்கள் நாளொன்றுக்கு 1,000 பதிவுகள் மட்டும் பார்க்க முடியுமென அண்மையில் எலன் மஸ்க் கட்டுப்பாடுகள் விதித்தது பயனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.ட்விட்டருக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட தளங்களான புளூஸ்கை, மாஸ்டோடான் போன்றே, திரெட்ஸ் சேவையும் பரவலான சமூக வலைதளமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.முன்னதாக, வெளியான ஸ்கிரீன்ஷாட்களின் படி திரெட்ஸ் சேவை தோற்றத்தில் இன்ஸ்டாகிராம் போன்றும், பயன்பாடுகள் அனைத்தும் ட்விட்டர் போன்றிருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.இந்த செயலி இன்ஸ்டாகிராம் கணக்கு விவரங்களை கொண்டு தானாகவே ப்ரோபைலை உருவாக்கும் என கூறப்படுகிறது.