• May 21 2024

யாழில் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்ததின நிகழ்வு!

Sharmi / Jan 18th 2023, 3:17 pm
image

Advertisement

மறைந்த, தமிழக முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான டாக்டர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்ததின நிகழ்வு சண்டிலிப்பாய் கலாச்சார மண்டபத்தில் மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது.

வடமாகாண எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில், அக் கழகத்தின் தலைவர் செல்வகுமாரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது 106 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் பார்வை குறைபாடுகள் உள்ள 106 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வின்போது முன்னாள் போராளியான பாவரசன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். அத்துடன் ஈழத்து ஜெயலலிதா என அழைக்கப்படும் சிறிகாந்தன் சுபாசினி அவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் "தேசாபிமானி, சமூகதிலகம்" ஆகிய கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் சைவம், கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் மதகுருக்கள் கலந்து சிறப்பித்துடன், இந் நிகழ்வில் எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்கள், ரசிகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







யாழில் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்ததின நிகழ்வு மறைந்த, தமிழக முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான டாக்டர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்ததின நிகழ்வு சண்டிலிப்பாய் கலாச்சார மண்டபத்தில் மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது.வடமாகாண எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில், அக் கழகத்தின் தலைவர் செல்வகுமாரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது 106 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் பார்வை குறைபாடுகள் உள்ள 106 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.இந் நிகழ்வின்போது முன்னாள் போராளியான பாவரசன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். அத்துடன் ஈழத்து ஜெயலலிதா என அழைக்கப்படும் சிறிகாந்தன் சுபாசினி அவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் "தேசாபிமானி, சமூகதிலகம்" ஆகிய கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டது.குறித்த நிகழ்வில் சைவம், கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் மதகுருக்கள் கலந்து சிறப்பித்துடன், இந் நிகழ்வில் எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்கள், ரசிகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement