• Sep 17 2024

இந்தியாவுக்கு திடீர் விஜயம் மேற்கொள்ளும் அமைச்சர் ஜீவன் தொண்டமான்!SamugamMedia

Sharmi / Mar 1st 2023, 3:02 pm
image

Advertisement

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை இன்று (01.03.2023) மேற்கொள்கின்றார்.

பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புதுடெல்லியில் நாளை (02.03.2023) நடைபெறும் (Raisina Dialogue) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்கின்றார்.

இந்த மாநாட்டை தவிர, மார்ச் 03 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை அமைச்சர் இந்தியாவில் தங்கவுள்ளார். இந்த இலங்கை குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்குகின்றார்.

மார்ச் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதிவரை குறித்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

இந்தியாவுக்கு திடீர் விஜயம் மேற்கொள்ளும் அமைச்சர் ஜீவன் தொண்டமான்SamugamMedia இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை இன்று (01.03.2023) மேற்கொள்கின்றார்.பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புதுடெல்லியில் நாளை (02.03.2023) நடைபெறும் (Raisina Dialogue) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்கின்றார்.இந்த மாநாட்டை தவிர, மார்ச் 03 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார்.அதற்கமைய, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை அமைச்சர் இந்தியாவில் தங்கவுள்ளார். இந்த இலங்கை குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்குகின்றார்.மார்ச் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதிவரை குறித்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement