• May 04 2024

சுமார் 70 அரச அதிகாரிகளுக்கு ஆப்பு..! பணியில் இருந்து நீக்குமாறு அமைச்சர் அதிரடி உத்தரவு..! samugammedia

Chithra / May 28th 2023, 11:33 am
image

Advertisement

நாட்டில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலங்கள், முடிவடைந்துள்ள நிலையில், நிர்வாக பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சுமார் 70 பேர் அந்த பதவிகளில் பணியாற்றுவதற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகளை உடனடியாக அந்தப் பதவிகளில் இருந்து நீக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இதுபோன்ற பல அதிகாரிகள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், முறைகெடான அதிகாரிகள் இனங்காணப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து நிர்வாகப் பணிகளுக்காக அதிகாரிகள் (செயலாளர்கள் மற்றும் ஆணையர்கள்) நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


சுமார் 70 அரச அதிகாரிகளுக்கு ஆப்பு. பணியில் இருந்து நீக்குமாறு அமைச்சர் அதிரடி உத்தரவு. samugammedia நாட்டில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலங்கள், முடிவடைந்துள்ள நிலையில், நிர்வாக பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சுமார் 70 பேர் அந்த பதவிகளில் பணியாற்றுவதற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அதிகாரிகளை உடனடியாக அந்தப் பதவிகளில் இருந்து நீக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.இராஜாங்க அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இதுபோன்ற பல அதிகாரிகள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், முறைகெடான அதிகாரிகள் இனங்காணப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து நிர்வாகப் பணிகளுக்காக அதிகாரிகள் (செயலாளர்கள் மற்றும் ஆணையர்கள்) நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement