• May 06 2024

வீட்டு சிறையில் இருந்து எம்.டெக் படித்து மாணவி சாதனை..!samugammedia

Sharmi / May 28th 2023, 11:32 am
image

Advertisement

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தடையினை மீறி மாணவி ஒருவர் எம்.டெக் படித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்ததில் இருந்து  பெண்கள் உயர்கல்வி படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  யாருக்கும் தெரியாது ரகசியமாக சென்னை ஐஐடியில் ஆன்லைன் மூலம் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெகிஸ்தா என்ற மாணவியே எம்டெக் படித்துள்ளார்.

 மாணவி பெகிஸ்தாவிற்கு சென்னை ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் எம்டெக் படிக்க இடம் கிடைத்த போதிலும், தலிபான்கள் தடை காரணமாக அவர் படிக்க முடியாத நிலை இருந்துள்ளது.
 
அதனால், சென்னை ஐஐடி நிர்வாகத்துடன் பேசி ஆன்லைன் வாயிலாக மாணவிக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து, மாணவி பெகிஸ்தா தனது வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து இரவு பகலாக படித்து தற்போது எம்டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் சென்னைக்கு நேரில் வந்து பட்டம் பெற விரும்புவதாகவும், அத்துடன்  பிஎச்டி படிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தான் பெண்கள் வீட்டு சிறையில் இருந்தாலும் தடைகளை உடைத்து படிக்க வேண்டும் என்றும் என்றும் மாணவி பெகிஸ்தா கூறியுள்ளார்.

வீட்டு சிறையில் இருந்து எம்.டெக் படித்து மாணவி சாதனை.samugammedia ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தடையினை மீறி மாணவி ஒருவர் எம்.டெக் படித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்ததில் இருந்து  பெண்கள் உயர்கல்வி படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  யாருக்கும் தெரியாது ரகசியமாக சென்னை ஐஐடியில் ஆன்லைன் மூலம் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெகிஸ்தா என்ற மாணவியே எம்டெக் படித்துள்ளார்.  மாணவி பெகிஸ்தாவிற்கு சென்னை ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் எம்டெக் படிக்க இடம் கிடைத்த போதிலும், தலிபான்கள் தடை காரணமாக அவர் படிக்க முடியாத நிலை இருந்துள்ளது.  அதனால், சென்னை ஐஐடி நிர்வாகத்துடன் பேசி ஆன்லைன் வாயிலாக மாணவிக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்துள்ளனர். இதையடுத்து, மாணவி பெகிஸ்தா தனது வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து இரவு பகலாக படித்து தற்போது எம்டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் சென்னைக்கு நேரில் வந்து பட்டம் பெற விரும்புவதாகவும், அத்துடன்  பிஎச்டி படிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் பெண்கள் வீட்டு சிறையில் இருந்தாலும் தடைகளை உடைத்து படிக்க வேண்டும் என்றும் என்றும் மாணவி பெகிஸ்தா கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement