• Jun 22 2024

கல்விசாரா ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு..!

Chithra / Jun 14th 2024, 2:45 pm
image

Advertisement

  

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருடம் அதிகரிக்க முடியாது என கல்வி அமைச்சு உபவேந்தர்களுக்கு அறிவித்துள்ளது.

அதன்படி சம்பள அதிகரிப்பு கோரி ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு இன்றுடன் 43 நாட்கள் பூர்த்தியாகியுள்ளன.

இன்னிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் பல பல்கலைக்கழகங்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பளத்தில் 15 வீத வட் வரி அறவிடப்படுகின்றமை மற்றும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள இந்த தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இலங்கையின் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ளக மற்றும் வெளிவாரியாக கல்வி கற்கும் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்விசாரா ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு.   பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருடம் அதிகரிக்க முடியாது என கல்வி அமைச்சு உபவேந்தர்களுக்கு அறிவித்துள்ளது.அதன்படி சம்பள அதிகரிப்பு கோரி ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு இன்றுடன் 43 நாட்கள் பூர்த்தியாகியுள்ளன.இன்னிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் பல பல்கலைக்கழகங்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சம்பளத்தில் 15 வீத வட் வரி அறவிடப்படுகின்றமை மற்றும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள இந்த தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதன் காரணமாக இலங்கையின் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ளக மற்றும் வெளிவாரியாக கல்வி கற்கும் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement