• Sep 21 2024

சிவராத்திரியன்று மாட்டுக் கன்றின் தலையை வெட்டி வீதியில் வீசிய விஷமிகள்! யாழில் சம்பவம் SamugamMedia

Chithra / Feb 18th 2023, 2:04 pm
image

Advertisement

சிவராத்திரி தினமான இன்று மாட்டு கன்று ஒன்றினை வெட்டி, அதன் தலையையும், இதர மாமிச கழிவுகளையும் வீதியில் விஷமிகள் வீசி சென்றுள்ளனர்.

கோண்டாவில், முத்தட்டுமட வீதியில் காலை மாமிச கழிவுகள் வீசப்பட்டு காணப்பட்டமையை அடுத்து, அப்பகுதி மக்களால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.


அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , நல்லூர் பிரதேச சபை கழிவகற்றும் வாகனத்தின் ஊடாக கழிவுகளை அகற்றினர்.

சிவராத்திரி விரத நாள் அன்று மாட்டு கன்றினை வெட்டி அதன் தலையை வீசி சென்று இருந்தமை அப்பகுதி மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


விஷமிகளின் இந்த செயற்பாட்டிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸாரிடம் கோரியுள்ளனர்.

சிவராத்திரியன்று மாட்டுக் கன்றின் தலையை வெட்டி வீதியில் வீசிய விஷமிகள் யாழில் சம்பவம் SamugamMedia சிவராத்திரி தினமான இன்று மாட்டு கன்று ஒன்றினை வெட்டி, அதன் தலையையும், இதர மாமிச கழிவுகளையும் வீதியில் விஷமிகள் வீசி சென்றுள்ளனர்.கோண்டாவில், முத்தட்டுமட வீதியில் காலை மாமிச கழிவுகள் வீசப்பட்டு காணப்பட்டமையை அடுத்து, அப்பகுதி மக்களால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , நல்லூர் பிரதேச சபை கழிவகற்றும் வாகனத்தின் ஊடாக கழிவுகளை அகற்றினர்.சிவராத்திரி விரத நாள் அன்று மாட்டு கன்றினை வெட்டி அதன் தலையை வீசி சென்று இருந்தமை அப்பகுதி மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.விஷமிகளின் இந்த செயற்பாட்டிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸாரிடம் கோரியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement