• Mar 05 2025

வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் நடமாடும் சேவை..!

Sharmi / Mar 4th 2025, 9:23 am
image

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் நடைபெறும் நடமாடும் சேவை நாளையதினம்(05) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் காலை 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை நடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

வடக்கு மாகாண சபையின் 5 அமைச்சுக்களின் செயலாளர்கள், அமைச்சுக்களின் கீழான அனைத்துத் திணைக்களங்களின் தலைவர்களும், அதற்கு மேலதிகமாக மத்திய அரசின் கீழான இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்களம், கரையோர பாதுகாப்புத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிராந்தியத் திணைக்களத் தலைவர்களும் இந்த நடமாடும் சேவையில் பங்கேற்கவுள்ளனர்.   

இந்த அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஊடாக சேவைகளை பெற்றுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் நடமாடும் சேவையில் கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் நடமாடும் சேவை. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் நடைபெறும் நடமாடும் சேவை நாளையதினம்(05) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் காலை 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை நடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. வடக்கு மாகாண சபையின் 5 அமைச்சுக்களின் செயலாளர்கள், அமைச்சுக்களின் கீழான அனைத்துத் திணைக்களங்களின் தலைவர்களும், அதற்கு மேலதிகமாக மத்திய அரசின் கீழான இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்களம், கரையோர பாதுகாப்புத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிராந்தியத் திணைக்களத் தலைவர்களும் இந்த நடமாடும் சேவையில் பங்கேற்கவுள்ளனர்.   இந்த அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஊடாக சேவைகளை பெற்றுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் நடமாடும் சேவையில் கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement