ஆலயங்களில் வெள்ளிக்கிழமை தோறும் அறநெறி வகுப்புக்கள் நடாத்தப்பட வேண்டும் என யாழ் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெல்லிப்பழை மகாதனை கோணசீம திருவருள்மிகு ஸ்ரீ நரசிம்ம வைரவர் ஆலய கும்பாவிஷேக நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெள்ளிக்கிழமைகள் தோறும் ஆலயங்களில் பஜனை , கூட்டுப் பிரார்த்தனை என்பன நடைபெறுவதுடன் விசேட பூசைகள் இடம்பெற்று பிரசாதம் விசேடமாக வழங்கப்பட வேண்டும்.
இதேவேளை ஞாயிறு தினங்களில் மாணவர்கள் அறநெறி வகுப்புக்களுடன் தியான வகுப்புக்கள், யோகா வகுப்புக்கள் மற்றும் கலை சார்ந்த வகுப்புக்களில் பங்கெடுக்க வேண்டும்.
நீண்ட காலமாக முயற்சி செய்த விடயம் தற்போது கைகூடியுள்ளது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்களை நிறுத்தி மாணவர்களை இத்துறைகளில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றார்.
ஆகவே, சிறு வயதிலிருந்து குழந்தைகளுக்கு அறநெறியையும், சைவப் பண்பாட்டையும் , இந்துக் கலாச்சாரத்தையும் வளர்ப்போமாக இருந்தால் நல்ல சமுதாயத்தை நாங்கள் உருவாக்க முடியும்.
இதன் மூலம் தமிழர்களின் நில இருப்பு, தமிழ் மொழி மற்றும் சைவப் பண்பாட்டு வாழ்வியல் என்பவற்றைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
எனவே, இந்தப் பணியை ஆலயங்களும் பெற்றோர்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை தோறும் ஆலயங்களில் அறநெறி வகுப்புக்கள் நடாத்தப்பட வேண்டும். வேலன் சுவாமிகள் வேண்டுகோள்.samugammedia ஆலயங்களில் வெள்ளிக்கிழமை தோறும் அறநெறி வகுப்புக்கள் நடாத்தப்பட வேண்டும் என யாழ் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தெல்லிப்பழை மகாதனை கோணசீம திருவருள்மிகு ஸ்ரீ நரசிம்ம வைரவர் ஆலய கும்பாவிஷேக நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,வெள்ளிக்கிழமைகள் தோறும் ஆலயங்களில் பஜனை , கூட்டுப் பிரார்த்தனை என்பன நடைபெறுவதுடன் விசேட பூசைகள் இடம்பெற்று பிரசாதம் விசேடமாக வழங்கப்பட வேண்டும்.இதேவேளை ஞாயிறு தினங்களில் மாணவர்கள் அறநெறி வகுப்புக்களுடன் தியான வகுப்புக்கள், யோகா வகுப்புக்கள் மற்றும் கலை சார்ந்த வகுப்புக்களில் பங்கெடுக்க வேண்டும்.நீண்ட காலமாக முயற்சி செய்த விடயம் தற்போது கைகூடியுள்ளது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்களை நிறுத்தி மாணவர்களை இத்துறைகளில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றார்.ஆகவே, சிறு வயதிலிருந்து குழந்தைகளுக்கு அறநெறியையும், சைவப் பண்பாட்டையும் , இந்துக் கலாச்சாரத்தையும் வளர்ப்போமாக இருந்தால் நல்ல சமுதாயத்தை நாங்கள் உருவாக்க முடியும்.இதன் மூலம் தமிழர்களின் நில இருப்பு, தமிழ் மொழி மற்றும் சைவப் பண்பாட்டு வாழ்வியல் என்பவற்றைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.எனவே, இந்தப் பணியை ஆலயங்களும் பெற்றோர்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.