• Jan 22 2025

நினைவேந்தல் நிகழ்வு குறித்து இனி அதிக கவனம்! - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

Chithra / Jan 21st 2025, 7:20 am
image


நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"உயிழந்த தமது உறவுகளை நினைவேந்த எந்த இனத்தவர்களுக்கும் முழு உரிமையுண்டு. அதை எமது அரசு தடுத்து நிறுத்தாது.

ஆனால், வடக்கு, கிழக்கில் சில நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலையீடு ஆதிக்கம் செலுத்துவதால் அது வெளியில் வேறொரு கோணத்தில் பார்க்கப்படுகின்றது.

தெற்கில் உள்ள ஒரு தரப்பினர் அதைப்  பயங்கரவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். இதனால் வடக்கு - தெற்கு அரசியல்வாதிகளுக்கிடையில் பொது வெளியில் கருத்து மோதல்கள் இடம்பெறுகின்றன.

எனவே, நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும். நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்துவது எமது நோக்கம் அல்ல." - என்றார்.

நினைவேந்தல் நிகழ்வு குறித்து இனி அதிக கவனம் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,"உயிழந்த தமது உறவுகளை நினைவேந்த எந்த இனத்தவர்களுக்கும் முழு உரிமையுண்டு. அதை எமது அரசு தடுத்து நிறுத்தாது.ஆனால், வடக்கு, கிழக்கில் சில நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலையீடு ஆதிக்கம் செலுத்துவதால் அது வெளியில் வேறொரு கோணத்தில் பார்க்கப்படுகின்றது.தெற்கில் உள்ள ஒரு தரப்பினர் அதைப்  பயங்கரவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். இதனால் வடக்கு - தெற்கு அரசியல்வாதிகளுக்கிடையில் பொது வெளியில் கருத்து மோதல்கள் இடம்பெறுகின்றன.எனவே, நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும். நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்துவது எமது நோக்கம் அல்ல." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement