• May 04 2024

மேலதிக வகுப்புகள் இடைநிறுத்தம்! சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Chithra / Apr 25th 2024, 8:17 am
image

Advertisement

 

எதிர்வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  

அதன்படி, 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் உள்ளிட்டவை இடைநிறுத்தப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல், அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல், மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக வகுப்புகள் இடைநிறுத்தம் சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு  எதிர்வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  அதன்படி, 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் உள்ளிட்டவை இடைநிறுத்தப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.இதேவேளை, பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல், அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல், மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement