• May 21 2024

08 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாகன அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்! samugammedia

Chithra / Jun 30th 2023, 11:33 am
image

Advertisement

8 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகன அனுமதி பத்திரங்களை  வழங்குவதில் பல மாதங்களாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு இம்மாதம் 19ஆம் திகதி முதல் வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலத்தை இரண்டு வருடங்களாக நீடிக்க வேண்டியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சொந்தமான வாகன அனுமதி பத்திரங்களை  அச்சடிக்கும் இயந்திரங்கள் போதிய திறன் இன்மையே இதற்கு முக்கிய காரணம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 20 கோடி ரூபாய் செலவழித்து புதிய இயந்திரங்களை வாங்க முன்வராததால், மோட்டார் போக்குவரத்து துறையின் கணினி அமைப்புக்கு பொறுப்பான நிறுவனத்திடம் அச்சு பதிப்பகங்களை  பெற்றுக்கொள்ளவும், ஒப்பந்தத்தின் பேரில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அங்குள்ள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

எனினும் இதன் காரணமாக 8 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் 6 மாதங்களுக்கு மேலாக அச்சிடப்படாமல் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது

08 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாகன அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல் samugammedia 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகன அனுமதி பத்திரங்களை  வழங்குவதில் பல மாதங்களாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .இந்த நிலைமையை கருத்திற் கொண்டு இம்மாதம் 19ஆம் திகதி முதல் வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலத்தை இரண்டு வருடங்களாக நீடிக்க வேண்டியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சொந்தமான வாகன அனுமதி பத்திரங்களை  அச்சடிக்கும் இயந்திரங்கள் போதிய திறன் இன்மையே இதற்கு முக்கிய காரணம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.சுமார் 20 கோடி ரூபாய் செலவழித்து புதிய இயந்திரங்களை வாங்க முன்வராததால், மோட்டார் போக்குவரத்து துறையின் கணினி அமைப்புக்கு பொறுப்பான நிறுவனத்திடம் அச்சு பதிப்பகங்களை  பெற்றுக்கொள்ளவும், ஒப்பந்தத்தின் பேரில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அங்குள்ள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.எனினும் இதன் காரணமாக 8 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் 6 மாதங்களுக்கு மேலாக அச்சிடப்படாமல் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement