• May 18 2024

வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்ட 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்கான் அகதிகள்!

Tamil nila / Feb 3rd 2023, 5:29 pm
image

Advertisement

ஈரானிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்கான் நாட்டு அகதிகள் ஆப்கானிஸ்தானின் Islam Qala மற்றும் Pule Abrishum எல்லைப் பகுதிகள் வழியாக நாடு கடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 



தாலிபான் தலைமையிலான ஆப்கான் அகதிகள் அமைச்சக கூற்றுப்படி, கடந்த ஜனவரி 24, 25 தேதி 3,123 ஆப்கானியர்கள் ஈரானால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


சமீப காலமாக ஆப்கான் நாட்டவர்களை சிறைப்படுத்தி, வலுக்கட்டாயமாக நாடுகடத்தும் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டு  வருகிறது. ஈரானிய வெளிவிவகார அமைச்சக கணக்குப்படி, 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் ஈரானில் வசித்து வருகின்றனர். 


ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பு கைப்பற்றியது முதல் உயிருக்கு அஞ்சியும் மோசமான பொருளாதார சூழலாலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். 



குறிப்பாக ஆப்கானிஸ்தானுடன் எல்லையை கொண்டிருக்கும் ஈரான் மற்றும் பாகிஸ்தானை நோக்கி பெருமளவிலான ஆப்கானியர்கள் புலம்பெயர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்ட 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்கான் அகதிகள் ஈரானிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்கான் நாட்டு அகதிகள் ஆப்கானிஸ்தானின் Islam Qala மற்றும் Pule Abrishum எல்லைப் பகுதிகள் வழியாக நாடு கடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தாலிபான் தலைமையிலான ஆப்கான் அகதிகள் அமைச்சக கூற்றுப்படி, கடந்த ஜனவரி 24, 25 தேதி 3,123 ஆப்கானியர்கள் ஈரானால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.சமீப காலமாக ஆப்கான் நாட்டவர்களை சிறைப்படுத்தி, வலுக்கட்டாயமாக நாடுகடத்தும் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டு  வருகிறது. ஈரானிய வெளிவிவகார அமைச்சக கணக்குப்படி, 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் ஈரானில் வசித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பு கைப்பற்றியது முதல் உயிருக்கு அஞ்சியும் மோசமான பொருளாதார சூழலாலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக ஆப்கானிஸ்தானுடன் எல்லையை கொண்டிருக்கும் ஈரான் மற்றும் பாகிஸ்தானை நோக்கி பெருமளவிலான ஆப்கானியர்கள் புலம்பெயர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement