• Sep 30 2024

லிபியாவில் கப்பல் விபத்து: அறுபத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு..!Samugammedia

Tamil nila / Dec 17th 2023, 6:26 pm
image

Advertisement

லிபிய கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 61 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

லிபியாவின் Zuwara நகரில் இருந்து 86 பேருடன் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பலியானவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியா, காம்பியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

உயிர் பிழைத்த 25 பேர் லிபியாவில் உள்ள தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, மத்திய மத்தியதரைக் கடல் உலகின் மிகவும் ஆபத்தான இடம்பெயர்வு பாதைகளில் ஒன்றாக உள்ளது என்று கூறியுள்ளது

லிபியாவில் கப்பல் விபத்து: அறுபத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு.Samugammedia லிபிய கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 61 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.லிபியாவின் Zuwara நகரில் இருந்து 86 பேருடன் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.பலியானவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியா, காம்பியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.உயிர் பிழைத்த 25 பேர் லிபியாவில் உள்ள தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, மத்திய மத்தியதரைக் கடல் உலகின் மிகவும் ஆபத்தான இடம்பெயர்வு பாதைகளில் ஒன்றாக உள்ளது என்று கூறியுள்ளது

Advertisement

Advertisement

Advertisement