• May 02 2024

வவுனியாவை வந்தடைந்த அன்னை பூபதியின் நினைவு ஊர்தி...!

Sharmi / Apr 16th 2024, 12:30 pm
image

Advertisement

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு , அன்னை பூபதியின்  திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று(16) வவுனியாவை வந்தடைந்த நிலையில் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த அன்னைபூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வடக்கு - கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள நிலையில் இன்று(16) வவுனியாவை வந்தடைந்தது.  

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பொங்கு தமிழ் நினைவுத்தூபி, பண்டார வன்னியன் நினைவு சதுக்கம், கோவில்குளம், ஈச்சங்குளம், வவுனியா வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் சென்றதுடன், அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா.ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன், தாய்மாரால் மலர்மாலை அணிவித்ததையடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



வவுனியாவை வந்தடைந்த அன்னை பூபதியின் நினைவு ஊர்தி. நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு , அன்னை பூபதியின்  திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று(16) வவுனியாவை வந்தடைந்த நிலையில் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த அன்னைபூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வடக்கு - கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள நிலையில் இன்று(16) வவுனியாவை வந்தடைந்தது.  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பொங்கு தமிழ் நினைவுத்தூபி, பண்டார வன்னியன் நினைவு சதுக்கம், கோவில்குளம், ஈச்சங்குளம், வவுனியா வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் சென்றதுடன், அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா.ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன், தாய்மாரால் மலர்மாலை அணிவித்ததையடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement