• May 19 2024

தமிழ் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு..!samugammedia

Sharmi / May 17th 2023, 11:53 am
image

Advertisement

அம்பாறை மாவட்ட தமிழ் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், நாவிதன்வெளி பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் தர்சினி, போராளிகள் குடும்ப உறவுகள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மாவீரர் பெற்றோரினால் முள்ளிவாய்க்கால் நினைவுப் பொதுச் சுடரேற்றப்பட்டதுடன், வருகைதந்தோரினால் சுடர்கள் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

அம்பாறை மாவட்ட சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக நிகழ்வுகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் அவலங்களைக் காட்சிப்படுத்தும் பதாதைகள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இன்றைய இரண்டாவது நாளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு.samugammedia அம்பாறை மாவட்ட தமிழ் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பில் முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், நாவிதன்வெளி பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் தர்சினி, போராளிகள் குடும்ப உறவுகள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போது மாவீரர் பெற்றோரினால் முள்ளிவாய்க்கால் நினைவுப் பொதுச் சுடரேற்றப்பட்டதுடன், வருகைதந்தோரினால் சுடர்கள் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.அம்பாறை மாவட்ட சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக நிகழ்வுகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் அவலங்களைக் காட்சிப்படுத்தும் பதாதைகள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்றைய இரண்டாவது நாளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement