• May 19 2024

எனது பதவியை பறித்ததற்கு இதுவே காரணம்..! அனுராதா யஹம்பத் வெளியிட்ட தகவல்.! samugammedia

Sharmi / May 17th 2023, 11:39 am
image

Advertisement

சில அரசியல்வாதிகளால் அவர்களது எண்ணத்திற்கு ஏற்ப தன்னை வளைக்கமுடியாத காரணத்தினாலேயே தனது ஆளுநர் பதவியை பறித்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்றையதினம் பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஆளுநர் பதவி என்பது அரசியல் நியமனமாக இருந்தாலும் பதவி ஏற்ற பின்னர், பாரபட்சமின்றி நேரடியாகச் செயல்பட வேண்டும் என்பதே தனது கொள்கையாக இருந்ததாகவும் அது கிழக்கு மாகாண மக்களுக்கு தெரியும் என்றும் முன்னாள் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் தமது நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப என்னைக் கையாள இயலாமையே எனக்கு ஆளுநர் பதவியை இழக்கக் காரணமாக இருக்கலாம் என நான் கருதுகின்றேன்'

ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு வழங்கும் அடிப்படை சலுகைகளை சமமாக அனுபவிக்க உரிமை உள்ளது. அந்த உரிமையை அரசியலாக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கிறேன்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் இனவாதம் எனது கடமைகளுக்குப் பொருந்தாது. சில அரசியல்வாதிகள் தங்கள் விருப்பத்திற்கு என்னை வளைக்க முடியவில்லை.

கடந்த மூன்று வருடங்களாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதியிடம் எனக்கு எதிராக பல்வேறு கதைகளை கூறி என்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தனர்.

என் மனசாட்சியும் கொள்கைகளும் மாறாது. ஜனாதிபதி எங்களை விலகுமாறு அறிவித்தார். இது மிகவும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

எனது பதவியை பறித்ததற்கு இதுவே காரணம். அனுராதா யஹம்பத் வெளியிட்ட தகவல். samugammedia சில அரசியல்வாதிகளால் அவர்களது எண்ணத்திற்கு ஏற்ப தன்னை வளைக்கமுடியாத காரணத்தினாலேயே தனது ஆளுநர் பதவியை பறித்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் குற்றம் சுமத்தியுள்ளார்.நேற்றையதினம் பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.ஆளுநர் பதவி என்பது அரசியல் நியமனமாக இருந்தாலும் பதவி ஏற்ற பின்னர், பாரபட்சமின்றி நேரடியாகச் செயல்பட வேண்டும் என்பதே தனது கொள்கையாக இருந்ததாகவும் அது கிழக்கு மாகாண மக்களுக்கு தெரியும் என்றும் முன்னாள் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் தமது நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப என்னைக் கையாள இயலாமையே எனக்கு ஆளுநர் பதவியை இழக்கக் காரணமாக இருக்கலாம் என நான் கருதுகின்றேன்' ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு வழங்கும் அடிப்படை சலுகைகளை சமமாக அனுபவிக்க உரிமை உள்ளது. அந்த உரிமையை அரசியலாக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கிறேன். சிங்கள, தமிழ், முஸ்லிம் இனவாதம் எனது கடமைகளுக்குப் பொருந்தாது. சில அரசியல்வாதிகள் தங்கள் விருப்பத்திற்கு என்னை வளைக்க முடியவில்லை. கடந்த மூன்று வருடங்களாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதியிடம் எனக்கு எதிராக பல்வேறு கதைகளை கூறி என்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தனர். என் மனசாட்சியும் கொள்கைகளும் மாறாது. ஜனாதிபதி எங்களை விலகுமாறு அறிவித்தார். இது மிகவும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement