• May 06 2024

வடக்கு ஆளுநராக மீண்டும் சார்ள்ஸ்...! சற்றுமுன்னர் புதிய ஆளுநர்கள் பதவியேற்பு..! samugammedia

Chithra / May 17th 2023, 11:37 am
image

Advertisement

வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம், முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,  வடக்கு மாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் புதிய நியமனக்கடிதங்களை பெற்றுள்ளனர்.

வடக்கு, கிழக்கு, மேல், வட மேல், சபரகமுவ மற்றும் ஊவா மாகாண ஆளுநர்களைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்தியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இன்று புதிய நியமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

முன்னாள் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், முன்னாள் வட மேல் மாகாண ஆளுநர் அட்மிரல், வசந்த கரன்னாகொட ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கடந்த 15 ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தார். 

இந்நிலையில் குறித்த 3 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



வடக்கு ஆளுநராக மீண்டும் சார்ள்ஸ். சற்றுமுன்னர் புதிய ஆளுநர்கள் பதவியேற்பு. samugammedia வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்றையதினம், முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,  வடக்கு மாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் புதிய நியமனக்கடிதங்களை பெற்றுள்ளனர்.வடக்கு, கிழக்கு, மேல், வட மேல், சபரகமுவ மற்றும் ஊவா மாகாண ஆளுநர்களைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்தியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இன்று புதிய நியமங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், முன்னாள் வட மேல் மாகாண ஆளுநர் அட்மிரல், வசந்த கரன்னாகொட ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கடந்த 15 ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தார். இந்நிலையில் குறித்த 3 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement