• Nov 25 2024

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள்...! முஷாரப் எம்.பி நடவடிக்கை...!

Sharmi / Mar 2nd 2024, 3:26 pm
image

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப்  தெரிவித்தார்.

அம்பாறை அட்டாளைச்சேனை தனியார் விருந்தினர் விடுதியில்  நேற்றிரவு(01)   இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தீர்மானம் மேற்கொள்ளும் எந்த பதவி நிலையிலும் எவரும் இல்லை என்பதையும், பல்வேறு முக்கிய பதவி நிலைகளுக்கு முஸ்லிம் நிர்வாகிகள் உள்ளவாங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர்கள், ‘இதற்கு ஏன் நீங்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை’ எனவும் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப்,

 கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாகவும், திணைக்களங்களின் தலைவர்களாகவும் முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் பலரும் நியமிக்கப்படுவதற்கான செயற்பாடுகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளதுடன் அவ்விடயம் விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டபோது இனவாதக் கருத்துடன் பலரும் கருத்து தெரிவித்த நிலையில், நாமும் அந்தக் கருத்துக்களுடன் செல்லவில்லை. மாறாக கிழக்கைக் கட்டியெழுப்பக்கூடிய துடிப்புள்ள வேகமான  செயல்திறன் கொண்ட ஆளுநரே நமக்குத் தேவை என்கின்ற நிலைப்பாட்டுடன் நாம் இருந்தோம். 

அந்த வகையில் திறமையான ஆளுநர் நமக்குக் கிடைத்திருக்கின்றார்.  இரவு பகலாக அர்ப்பணிப்புடன் செயல்படுவதைக் காண்கின்றோம்.

அந்த வகையில் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் மிக விரைவாக நியமிக்கப்படுவார்கள் என மிகவும் உறுதியாக அறிகின்றேன் எனவும் அதற்கான முழுமையான முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாகவும்  முசாரப் எம்.பி. தெரிவித்தார்.



கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள். முஷாரப் எம்.பி நடவடிக்கை. கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப்  தெரிவித்தார்.அம்பாறை அட்டாளைச்சேனை தனியார் விருந்தினர் விடுதியில்  நேற்றிரவு(01)   இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தில் தீர்மானம் மேற்கொள்ளும் எந்த பதவி நிலையிலும் எவரும் இல்லை என்பதையும், பல்வேறு முக்கிய பதவி நிலைகளுக்கு முஸ்லிம் நிர்வாகிகள் உள்ளவாங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர்கள், ‘இதற்கு ஏன் நீங்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை’ எனவும் கேள்வியெழுப்பினர்.இதற்கு பதிலளித்த சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாகவும், திணைக்களங்களின் தலைவர்களாகவும் முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் பலரும் நியமிக்கப்படுவதற்கான செயற்பாடுகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளதுடன் அவ்விடயம் விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டபோது இனவாதக் கருத்துடன் பலரும் கருத்து தெரிவித்த நிலையில், நாமும் அந்தக் கருத்துக்களுடன் செல்லவில்லை. மாறாக கிழக்கைக் கட்டியெழுப்பக்கூடிய துடிப்புள்ள வேகமான  செயல்திறன் கொண்ட ஆளுநரே நமக்குத் தேவை என்கின்ற நிலைப்பாட்டுடன் நாம் இருந்தோம். அந்த வகையில் திறமையான ஆளுநர் நமக்குக் கிடைத்திருக்கின்றார்.  இரவு பகலாக அர்ப்பணிப்புடன் செயல்படுவதைக் காண்கின்றோம்.அந்த வகையில் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் மிக விரைவாக நியமிக்கப்படுவார்கள் என மிகவும் உறுதியாக அறிகின்றேன் எனவும் அதற்கான முழுமையான முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாகவும்  முசாரப் எம்.பி. தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement