• Sep 17 2024

அரசாங்கத்தின் புதிய அறிவிப்பால் முஸ்லிம் பெண்களுக்கு சிக்கல்: சபையில் எம்.பி. வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!samugammedia

Sharmi / Apr 5th 2023, 2:36 pm
image

Advertisement

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலிலும், இனவாத ரீதியான செயற்பாடுகள் தற்பொழுதும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுவரும்போது சிறுபான்மை மக்கள் எவ்வாறு இந்த நாட்டின்மீது பற்று கொள்வார்கள் என நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றியபோது முஷாரப் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் பெண் சட்டத்தரணிகள் அணிகின்ற ஆடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியிருந்ததாகவும், இதில் முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் முஸ்லிம் பெண்கள் அணிகின்ற அபாயா உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும். தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் அந்த ஆடையின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.

நாடு இருக்கின்ற தற்போதைய நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் தேவையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

அரசாங்கத்தின் புதிய அறிவிப்பால் முஸ்லிம் பெண்களுக்கு சிக்கல்: சபையில் எம்.பி. வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்samugammedia பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலிலும், இனவாத ரீதியான செயற்பாடுகள் தற்பொழுதும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுவரும்போது சிறுபான்மை மக்கள் எவ்வாறு இந்த நாட்டின்மீது பற்று கொள்வார்கள் என நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றியபோது முஷாரப் கேள்வி எழுப்பியுள்ளார்.அண்மையில் பெண் சட்டத்தரணிகள் அணிகின்ற ஆடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியிருந்ததாகவும், இதில் முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் முஸ்லிம் பெண்கள் அணிகின்ற அபாயா உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும். தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் அந்த ஆடையின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.நாடு இருக்கின்ற தற்போதைய நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் தேவையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement