• Jan 23 2025

சுண்டிக்குளம் கடற்பரப்பில் கரையொதுங்கிய மர்மபொருள்..!

Sharmi / Jan 17th 2025, 12:48 pm
image

கிளிநொச்சி சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கிய நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கரையொதுங்கிய உருளை வடிவிலான மர்மப் பொருளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுத்துக்கள் தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றது.

இதனடிப்படையில் குறித்த மர்ம பொருளானது சீரற்ற காலநிலையால் இலங்கையின் வேறு பகுதிகளில் இருந்து வந்து இங்கு கரையொதுங்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகழிறது.

இந்நிலையில், அண்மைக்காலமாக வடக்கு கடற்பரப்பில் பல்வேறு விதமான மர்ம பொருட்கள் கரையொதுங்கி வருவது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கரையொதுங்கிய உருளை வடிவிலான மர்மப் பொருளை கடற்படையினர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



சுண்டிக்குளம் கடற்பரப்பில் கரையொதுங்கிய மர்மபொருள். கிளிநொச்சி சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கிய நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு கரையொதுங்கிய உருளை வடிவிலான மர்மப் பொருளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுத்துக்கள் தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றது.இதனடிப்படையில் குறித்த மர்ம பொருளானது சீரற்ற காலநிலையால் இலங்கையின் வேறு பகுதிகளில் இருந்து வந்து இங்கு கரையொதுங்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகழிறது.இந்நிலையில், அண்மைக்காலமாக வடக்கு கடற்பரப்பில் பல்வேறு விதமான மர்ம பொருட்கள் கரையொதுங்கி வருவது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு கரையொதுங்கிய உருளை வடிவிலான மர்மப் பொருளை கடற்படையினர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement