• Jan 27 2025

சுற்றுலா விடுதிகளில் இரவு வேளைகளில் இடம்பெறும் இசை நிகழ்வுகள் தொடர்பில் பதிலளித்த நலிந்த ஜயதிஸ்ஸ..!

Sharmi / Jan 25th 2025, 3:19 pm
image

சுற்றுலா விடுதிகளில் இரவில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அரசாங்கம் கட்டுப்பாடுகள் எதனையும் அரசாங்கம் விடுவிக்கவில்லை என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அரசாங்கம் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய முற்படுகிறது. கடந்த 21 நாட்களில் 1.7 இலட்சம்  சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். 

40 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இந்த ஆண்டு நாட்டுக்கு அழைத்து வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், மாத்தறை பொல்ஹேன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றை இரவு 10 மணிக்கு பொலிஸார் நிறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதியின் தீர்மானத்தின் பிரகாரம்தான் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அங்கிருந்த பெண் ஒருவர் கூறினார். இது அரசாங்கத்தின் தீர்மானம் இல்லை.

2005ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற தீர்பொன்று உள்ளது. 2010ஆம் ஆண்டும் உயர்நீதிமன்றம் குறித்த தீர்ப்பு குறித்து விளக்கமளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம்  திங்கள், செய்வாய், புதன், வியாழக்கிழமைகளில் இரவு 10 மணிவரை விநோத நிகழ்வுகளை நடத்த முடியும். ஏனைய நாட்னளில் 1.30 மணிவரையும் விநோத நிகழ்வுகளை நடத்த முடியும். அதன் பிரகாரம்தான் பொலிஸார் அதனை செய்துள்ளனர். மாறாக அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் இல்லை.

இந்தப் பெண்ணின் கருத்து சுற்றுலாத்துறையை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. இதனால் இதனை தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு இருப்பதுடன், மேற்படி உயர் நீதிமன்றத்தின் தீர்பின் பிரகாரம் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த நேர அட்டவணையில் மாற்றங்களை மேற்கொண்டு சுற்றுலாப் பயணிகளின் விநோதங்களை அனுபவிப்பதற்கான நேர எல்லையை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது  எனவும் தெரிவித்தார்.

சுற்றுலா விடுதிகளில் இரவு வேளைகளில் இடம்பெறும் இசை நிகழ்வுகள் தொடர்பில் பதிலளித்த நலிந்த ஜயதிஸ்ஸ. சுற்றுலா விடுதிகளில் இரவில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அரசாங்கம் கட்டுப்பாடுகள் எதனையும் அரசாங்கம் விடுவிக்கவில்லை என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய முற்படுகிறது. கடந்த 21 நாட்களில் 1.7 இலட்சம்  சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இந்த ஆண்டு நாட்டுக்கு அழைத்து வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.இந்த நிலையில், மாத்தறை பொல்ஹேன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றை இரவு 10 மணிக்கு பொலிஸார் நிறுத்தியுள்ளனர்.ஜனாதிபதியின் தீர்மானத்தின் பிரகாரம்தான் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அங்கிருந்த பெண் ஒருவர் கூறினார். இது அரசாங்கத்தின் தீர்மானம் இல்லை.2005ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற தீர்பொன்று உள்ளது. 2010ஆம் ஆண்டும் உயர்நீதிமன்றம் குறித்த தீர்ப்பு குறித்து விளக்கமளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம்  திங்கள், செய்வாய், புதன், வியாழக்கிழமைகளில் இரவு 10 மணிவரை விநோத நிகழ்வுகளை நடத்த முடியும். ஏனைய நாட்னளில் 1.30 மணிவரையும் விநோத நிகழ்வுகளை நடத்த முடியும். அதன் பிரகாரம்தான் பொலிஸார் அதனை செய்துள்ளனர். மாறாக அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் இல்லை.இந்தப் பெண்ணின் கருத்து சுற்றுலாத்துறையை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. இதனால் இதனை தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு இருப்பதுடன், மேற்படி உயர் நீதிமன்றத்தின் தீர்பின் பிரகாரம் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த நேர அட்டவணையில் மாற்றங்களை மேற்கொண்டு சுற்றுலாப் பயணிகளின் விநோதங்களை அனுபவிப்பதற்கான நேர எல்லையை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement