• Nov 21 2024

மனோவுக்கு தேசியப் பட்டியல்; செந்தில் தொண்டமான் ஆலோசனை..!

Sharmi / Nov 20th 2024, 4:01 pm
image

கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் என்பது காலத்தின் கட்டாயம் எனவும் மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்கி கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு மாவட்டத்தில் இம்முறை தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறவில்லை என்பதுடன், தலைநகர் கொழும்பில் மூன்று தமிழ் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வாய்ப்பிருந்தும் ஒருவர்கூட தெரிவாகவில்லை.

கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் என்பது காலத்தில் கட்டாயமாகும். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொழும்பில் வாழ்கின்றனர். அவர்களுக்கு கட்டாயம் தமிழ் பிரதிநிதி ஒருவர் இருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தலைநகரில் தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில், இம்முறை இப்பிரதிநிதித்துவத்தை கொழும்பு வாழ் தமிழ் மக்கள் இழந்துள்ளனர்.

இ.தொ.கா மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு இடையில் கொள்கை ரீதியான மாறுபட்ட கருத்துக்கள் உள்ள போதிலும், தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதில் இ.தொ.கா உட்பட ஏனைய தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலையிலேயே உள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேலதிகமாக 2 ஆசனங்களை பெறக்கூடிய நிலையில், தேர்தலில் வெற்றிப் பெற போவதில்லை என அறிந்தும் பல்வேறு தமிழ் சுயேட்சை குழுக்கள் தமிழ் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் களமிறக்கப்பட்டன. இதனூடாக கடந்த காலங்களில் மக்களுக்காக பல்வேறு சேவைவைகளை முன்னெடுத்த மருதப்பாண்டி ராமேஸ்வரன் சொற்ப சில நூறு வாக்கு குறைவால் பாராளுமன்றம் தெரிவு செய்வதற்கு தடையாக அமைந்தது.

அதனை தொடர்ந்து அதற்கு அடுத்தப்படியாக இருக்கும் சக்திவேலுக்கும் பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு இழக்கப்பட்டது. இவர்கள் இருவரைவிட குறைந்த வாக்குகளை பெற்ற சிலர் இன்று பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் கொழும்பில் ஏனைய கட்சிகளை விட ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் மனோ கணேசன் அதிக தமிழ் வாக்குகளை பெற்றுள்ளார். அதற்கு காரணம் அவர் கடந்த காலங்களில் கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுத்த சேவைகள்.அதன் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமிழர் ஒருவருக்கு தேசிய பட்டியல் வழங்க வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது.

கொழும்பில் தமிழ் வேட்பாளர்களில் அதிகப்படியான வாக்குகளை பெற்று, கடந்த காலங்களில் ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு மனோகணேசனுக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்கி கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனோவுக்கு தேசியப் பட்டியல்; செந்தில் தொண்டமான் ஆலோசனை. கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் என்பது காலத்தின் கட்டாயம் எனவும் மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்கி கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கொழும்பு மாவட்டத்தில் இம்முறை தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறவில்லை என்பதுடன், தலைநகர் கொழும்பில் மூன்று தமிழ் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வாய்ப்பிருந்தும் ஒருவர்கூட தெரிவாகவில்லை.கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் என்பது காலத்தில் கட்டாயமாகும். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொழும்பில் வாழ்கின்றனர். அவர்களுக்கு கட்டாயம் தமிழ் பிரதிநிதி ஒருவர் இருக்க வேண்டும்.கடந்த காலங்களில் தலைநகரில் தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில், இம்முறை இப்பிரதிநிதித்துவத்தை கொழும்பு வாழ் தமிழ் மக்கள் இழந்துள்ளனர்.இ.தொ.கா மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு இடையில் கொள்கை ரீதியான மாறுபட்ட கருத்துக்கள் உள்ள போதிலும், தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதில் இ.தொ.கா உட்பட ஏனைய தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலையிலேயே உள்ளன.நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேலதிகமாக 2 ஆசனங்களை பெறக்கூடிய நிலையில், தேர்தலில் வெற்றிப் பெற போவதில்லை என அறிந்தும் பல்வேறு தமிழ் சுயேட்சை குழுக்கள் தமிழ் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் களமிறக்கப்பட்டன. இதனூடாக கடந்த காலங்களில் மக்களுக்காக பல்வேறு சேவைவைகளை முன்னெடுத்த மருதப்பாண்டி ராமேஸ்வரன் சொற்ப சில நூறு வாக்கு குறைவால் பாராளுமன்றம் தெரிவு செய்வதற்கு தடையாக அமைந்தது.அதனை தொடர்ந்து அதற்கு அடுத்தப்படியாக இருக்கும் சக்திவேலுக்கும் பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு இழக்கப்பட்டது. இவர்கள் இருவரைவிட குறைந்த வாக்குகளை பெற்ற சிலர் இன்று பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளனர்.பாராளுமன்ற தேர்தலில் கொழும்பில் ஏனைய கட்சிகளை விட ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் மனோ கணேசன் அதிக தமிழ் வாக்குகளை பெற்றுள்ளார். அதற்கு காரணம் அவர் கடந்த காலங்களில் கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுத்த சேவைகள்.அதன் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமிழர் ஒருவருக்கு தேசிய பட்டியல் வழங்க வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது.கொழும்பில் தமிழ் வேட்பாளர்களில் அதிகப்படியான வாக்குகளை பெற்று, கடந்த காலங்களில் ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு மனோகணேசனுக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்கி கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement