கோப்பாய் பிரதேசத்தில் உள்ள மக்களின் பிரச்சனைகளை கேட்டு அறியும் நோக்குடன், தேசிய மக்கள் சக்தியின் மக்கள் குறைகேள் சந்திப்பு நேற்றையதினம்(19) நடைபெற்றது.
இந்த சந்திப்பில், பிரதேச மக்களின் வாழ்வாதார தேவைகள், கல்வி, வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன பிரச்சனைகள், விவசாயம் தொடர்பான அடிப்படை வசதிகளின் குறைபாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாப்பட்டன.
மக்கள் குறைகேள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி நேரடியாக மக்களுடன் உரையாடி, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.
அதேவேளை, அப் பகுதி மக்களின் குறைகளை தீர்க்கும் நோக்கில் தன்னுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்குவதாக அவர் உறுதியளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கோப்பாயில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் குறைகேள் சந்திப்பு. கோப்பாய் பிரதேசத்தில் உள்ள மக்களின் பிரச்சனைகளை கேட்டு அறியும் நோக்குடன், தேசிய மக்கள் சக்தியின் மக்கள் குறைகேள் சந்திப்பு நேற்றையதினம்(19) நடைபெற்றது.இந்த சந்திப்பில், பிரதேச மக்களின் வாழ்வாதார தேவைகள், கல்வி, வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன பிரச்சனைகள், விவசாயம் தொடர்பான அடிப்படை வசதிகளின் குறைபாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாப்பட்டன. மக்கள் குறைகேள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி நேரடியாக மக்களுடன் உரையாடி, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார். அதேவேளை, அப் பகுதி மக்களின் குறைகளை தீர்க்கும் நோக்கில் தன்னுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்குவதாக அவர் உறுதியளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.