• May 21 2024

நெடுந்தீவு கொடூர கொலைச் சம்பவம் - தற்போதைய நிலை தொடர்பில் வெளியான தகவல்கள்..! samugammedia

Chithra / Apr 22nd 2023, 4:57 pm
image

Advertisement

நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் வெட்டு காயங்களோடு கொண்டுவரப்பட்ட 100 வயது மூதாட்டியின் உடல் நிலை தேறி வருவதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.


நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந்தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


இதேவேளை நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள்  அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


அத்தோடு நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு சடலங்களை பார்வையிட்டுள்ளனர்.


தற்போது இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் தற்போது மக்கள் பதற்றத்துடன் காணப்படுவதாக தெரியவருகின்றது.

அத்தோடு, குறித்த பகுதியில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


நெடுந்தீவு கொடூர கொலைச் சம்பவம் - தற்போதைய நிலை தொடர்பில் வெளியான தகவல்கள். samugammedia நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் வெட்டு காயங்களோடு கொண்டுவரப்பட்ட 100 வயது மூதாட்டியின் உடல் நிலை தேறி வருவதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந்தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரியவருகின்றது.இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இதேவேளை நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள்  அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.அத்தோடு நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு சடலங்களை பார்வையிட்டுள்ளனர்.தற்போது இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.குறித்த பகுதியில் தற்போது மக்கள் பதற்றத்துடன் காணப்படுவதாக தெரியவருகின்றது.அத்தோடு, குறித்த பகுதியில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement