• Nov 26 2024

ரணிலின் வெற்றியை உறுதிப்படுத்த உருவாகும் புதிய கூட்டணி; கொழும்பில் விசேட கலந்துரையாடல்

Chithra / Aug 30th 2024, 9:31 am
image


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஜனாதிபதிக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய புதிய கூட்டணி எதிர்வரும் 5ஆம் திகதி உருவாக்கப்படவுள்ளது.

இதனை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று  பிற்பகல் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றதுடன், இதில் சுமார் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

எதிர்வரும் 5ஆம் திகதி பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் புதிய கூட்டணியை அறிவிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் தினேஷ் குணவர்தனவும், செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்படவுள்ளனர். 

ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நியமிக்கப்பட உள்ளனர்.

அத்துடன், இந்த புதிய கூட்டணி எதிர்காலத்தில் நடக்கவுள்ள தேர்தல்களில் போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் வெற்றியை உறுதிப்படுத்த உருவாகும் புதிய கூட்டணி; கொழும்பில் விசேட கலந்துரையாடல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஜனாதிபதிக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய புதிய கூட்டணி எதிர்வரும் 5ஆம் திகதி உருவாக்கப்படவுள்ளது.இதனை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.அத்துடன், ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.இந்த புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று  பிற்பகல் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றதுடன், இதில் சுமார் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.எதிர்வரும் 5ஆம் திகதி பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் புதிய கூட்டணியை அறிவிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் தினேஷ் குணவர்தனவும், செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்படவுள்ளனர். ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நியமிக்கப்பட உள்ளனர்.அத்துடன், இந்த புதிய கூட்டணி எதிர்காலத்தில் நடக்கவுள்ள தேர்தல்களில் போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement