சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரால் வங்கிகளில் பெறப்பட்டுள்ள கடன் தொடர்பில் அறிக்கை ஒன்றைத் தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நிதி மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.டி அபோன்சு தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் கடன் காரணமாக முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டதாகவும் அந்த பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது வங்கிகள் பராட்டே சட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதுடன், அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு நிவாரணம் - அநுர அரசு நடவடிக்கை சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரால் வங்கிகளில் பெறப்பட்டுள்ள கடன் தொடர்பில் அறிக்கை ஒன்றைத் தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நிதி மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.டி அபோன்சு தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் கடன் காரணமாக முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கலந்துரையாடலில் அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டதாகவும் அந்த பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது வங்கிகள் பராட்டே சட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதுடன், அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.