• May 04 2024

பிரிட்டனில் பரவும் புதிய கொரோனா - எச்சரிக்கை நிலையில் இலங்கை! samugammedia

Chithra / Aug 8th 2023, 9:31 am
image

Advertisement

பிரிட்டனில் எரிஸ் என்ற புதியவகை கொவிட் வைரஸ் பரவுவதை தொடர்ந்து அது குறித்து எச்சரிக்கையுடன் இருப்பதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய வைரஸ் குறித்தும் அது பரவும் விதம் குறித்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒமிக்ரோன் வகையை சேர்ந்த எரிஸ் என்ற புதிய வகை வைரஸ் பிரிட்டனில் பரவுவது முதன்முதலாக 31ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை பாதிக்கப்பட்ட பத்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் கொவிட் 19 குறித்த ஒருங்கிணைப்பாளர் வெளிநாட்டில் பரவும் எந்தவொரு வைரஸ் குறித்தும் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு இது குறித்து அச்சுறுத்தல்  ஏற்படலாம் என்பதால் வைரஸ் பரவுவதை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் பரவும் புதிய கொரோனா - எச்சரிக்கை நிலையில் இலங்கை samugammedia பிரிட்டனில் எரிஸ் என்ற புதியவகை கொவிட் வைரஸ் பரவுவதை தொடர்ந்து அது குறித்து எச்சரிக்கையுடன் இருப்பதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.புதிய வைரஸ் குறித்தும் அது பரவும் விதம் குறித்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஒமிக்ரோன் வகையை சேர்ந்த எரிஸ் என்ற புதிய வகை வைரஸ் பிரிட்டனில் பரவுவது முதன்முதலாக 31ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை பாதிக்கப்பட்ட பத்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் கொவிட் 19 குறித்த ஒருங்கிணைப்பாளர் வெளிநாட்டில் பரவும் எந்தவொரு வைரஸ் குறித்தும் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கு இது குறித்து அச்சுறுத்தல்  ஏற்படலாம் என்பதால் வைரஸ் பரவுவதை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement