• May 18 2024

தங்கத்திற்காக கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்! samugammedia

Chithra / Aug 8th 2023, 9:50 am
image

Advertisement

 கொட்டுகுடா பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருடும் நோக்கில் வீட்டுக்குள் புகுந்த நபரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் வசித்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த அவர், கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

61 வயதான கே.அனுர இந்திரகுமார பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அனுர மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

சம்பவத்தன்று அனுரவின் மனைவியும் மூன்று மகள்களும் தேவாலயம் சென்றிருந்ததாகவும் வீட்டு பணியாளர்களும் அனுரவும் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாரோ ஒருவர் மேல் தளத்திற்குள் புகுந்து பணிப்பெண்ணை கட்டி வைத்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் திருடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கீழ் மாடியில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அனுரவை கத்தியால் குத்தி பலத்த காயம் ஏற்படுத்திய நபர், அவர் அணிந்திருந்த பெறுமதியாக தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தகவல் அனுரவின் வீட்டில் இருந்த வீட்டுப் பணிப்பெண் மூலம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


தங்கத்திற்காக கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர் samugammedia  கொட்டுகுடா பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.திருடும் நோக்கில் வீட்டுக்குள் புகுந்த நபரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த வீட்டில் வசித்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த அவர், கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.61 வயதான கே.அனுர இந்திரகுமார பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அனுர மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.சம்பவத்தன்று அனுரவின் மனைவியும் மூன்று மகள்களும் தேவாலயம் சென்றிருந்ததாகவும் வீட்டு பணியாளர்களும் அனுரவும் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.யாரோ ஒருவர் மேல் தளத்திற்குள் புகுந்து பணிப்பெண்ணை கட்டி வைத்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் திருடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கீழ் மாடியில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அனுரவை கத்தியால் குத்தி பலத்த காயம் ஏற்படுத்திய நபர், அவர் அணிந்திருந்த பெறுமதியாக தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இத்தகவல் அனுரவின் வீட்டில் இருந்த வீட்டுப் பணிப்பெண் மூலம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement