உளநலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களுக்கு தேவையான ஆலோசனைகளும் ஆதரவும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் யாரை இலக்காகக் கொண்டது? எந்தெந்த மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது? என்பது தொடர்பில் உலக நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் ஏ. கங்காதரன் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உளநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், ஆலோசனை, வழிகாட்டல் மற்றும் ஆதரவுச் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது.
‘ஒருங்கிணைந்த சமூக அபிவிருத்தித் திட்டம்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகத் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட ஆயத்தப் பணிகளும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் உளநல விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், உளநலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் தங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப உளநல ஆற்றுப்படுத்தல் மையங்கள் மற்றும் ஆலோசனைச் சேவைகளையும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்காகச் சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்துடன் இணைந்து பணியாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு உளசமூக ஆதரவு மையத்தின் 26 ஆண்டுகால சேவையின் மைல்கல் நிகழ்வாக, தேசிய மட்டத்திலான பல்வேறு பொறுப்புகளுக்கான நியமனங்களும் தொண்டர்களுக்கான நியமனங்களும் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒக்டோபர் 25ஆம் திகதி, மட்டக்களப்பில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் உமர் கதாப் அப்துல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தேசிய மட்ட நியமனங்களை வழங்கி வைத்தார்.
சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளரும் உளசமூக ஆதரவு மையத்தின் தலைவியுமான தேவரஞ்சினி பிரான்சிஸ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
எம்.ஐ.யு. பல்கலைக்கழகத்தின் உளவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் உளசமூக ஆதரவு அமைப்பின் தேசிய ஆலோசகருமான தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸின் நெறிப்படுத்தலில், மட்டக்களப்பிலுள்ள உளவியல்சார் கற்கைகள் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நிகழ்வு நடைபெற்றது.
உளநலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் வயது மற்றும் சமூகப் பின்னணி போன்ற வேறுபாடுகளைக் கடந்து தேவையான ஆதரவையும் வழிகாட்டலையும் பெறக்கூடிய சூழலை உருவாக்குவதே இந்தப் புதிய திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதனை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரச நிறுவனங்கள், கல்விச் சமூகத்தினர், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உலக நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் ஏ. கங்காதரன் தெரிவித்துள்ளார்.
உளநலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய முயற்சி உளநலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களுக்கு தேவையான ஆலோசனைகளும் ஆதரவும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் யாரை இலக்காகக் கொண்டது எந்தெந்த மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்பது தொடர்பில் உலக நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் ஏ. கங்காதரன் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.உளநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், ஆலோசனை, வழிகாட்டல் மற்றும் ஆதரவுச் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது.‘ஒருங்கிணைந்த சமூக அபிவிருத்தித் திட்டம்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.முதற்கட்டமாகத் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட ஆயத்தப் பணிகளும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்தத் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் உளநல விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.அத்துடன், உளநலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் தங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப உளநல ஆற்றுப்படுத்தல் மையங்கள் மற்றும் ஆலோசனைச் சேவைகளையும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.இதற்காகச் சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்துடன் இணைந்து பணியாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதேவேளை, மட்டக்களப்பு உளசமூக ஆதரவு மையத்தின் 26 ஆண்டுகால சேவையின் மைல்கல் நிகழ்வாக, தேசிய மட்டத்திலான பல்வேறு பொறுப்புகளுக்கான நியமனங்களும் தொண்டர்களுக்கான நியமனங்களும் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒக்டோபர் 25ஆம் திகதி, மட்டக்களப்பில் நடைபெற்றது.கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் உமர் கதாப் அப்துல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தேசிய மட்ட நியமனங்களை வழங்கி வைத்தார்.சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளரும் உளசமூக ஆதரவு மையத்தின் தலைவியுமான தேவரஞ்சினி பிரான்சிஸ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. எம்.ஐ.யு. பல்கலைக்கழகத்தின் உளவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் உளசமூக ஆதரவு அமைப்பின் தேசிய ஆலோசகருமான தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸின் நெறிப்படுத்தலில், மட்டக்களப்பிலுள்ள உளவியல்சார் கற்கைகள் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நிகழ்வு நடைபெற்றது.உளநலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் வயது மற்றும் சமூகப் பின்னணி போன்ற வேறுபாடுகளைக் கடந்து தேவையான ஆதரவையும் வழிகாட்டலையும் பெறக்கூடிய சூழலை உருவாக்குவதே இந்தப் புதிய திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இதனை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரச நிறுவனங்கள், கல்விச் சமூகத்தினர், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உலக நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் ஏ. கங்காதரன் தெரிவித்துள்ளார்.