• Jan 05 2025

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்; மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்; அச்சத்தில் உலக நாடுகள்

Chithra / Jan 3rd 2025, 10:24 am
image


கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Human metapneumovirus   எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன.

மேலும், சீனாவில் இன்ஃபுளுவென்சா  வைரஸூம் பரவி வருகிறது.

சீனாவில் வைரஸின் தாக்கம் வேகமாகப் பரவி வருவதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் சீனாவின் தற்போதைய நிலைமை குறித்த யோசனையைப் பெற முடியும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு சீனாவில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த வைரஸ் பரவல் நிலை குறித்து சீன அதிகாரிகள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்; மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்; அச்சத்தில் உலக நாடுகள் கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.Human metapneumovirus   எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன.மேலும், சீனாவில் இன்ஃபுளுவென்சா  வைரஸூம் பரவி வருகிறது.சீனாவில் வைரஸின் தாக்கம் வேகமாகப் பரவி வருவதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் சீனாவின் தற்போதைய நிலைமை குறித்த யோசனையைப் பெற முடியும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு சீனாவில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.இந்த வைரஸ் பரவல் நிலை குறித்து சீன அதிகாரிகள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

Advertisement

Advertisement

Advertisement