• May 17 2024

இந்திய - இலங்கை பாதுகாப்பில் புதிய வழிகள் அடையாளம்! SamugamMedia

Chithra / Feb 26th 2023, 9:23 am
image

Advertisement

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்யும் மற்றும் ஈடுபாட்டிற்கான புதிய வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்திய மற்றும் இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் வருடாந்த உரையாடலின் ஏழாவது பதிப்பை நடத்தியவேளையில் இந்த புதிய வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வருடாந்த பாதுகாப்பு உரையாடலின் 7 வது பதிப்பின் இரண்டு நாள் கூட்டம், கடந்த வியாழக்கிழமை புதுதில்லியில் ஆரம்பித்து நேற்று சனிக்கிழமை நிறைவடைந்தது.


இந்திய தரப்புக்கு பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அர்மானேயும் இலங்கை தரப்புக்கு பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவும்  தலைமை தாங்கினர்.

இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின்போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பும் ஆய்வு செய்ததாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பல்வேறு பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்முயற்சிகள் கூட்டாக மதிப்பாய்வு செய்யப்பட்டு, ஈடுபாட்டிற்கான புதிய வழிகளும் இதன்போது அடையாளம் காணப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது..

 

இந்திய - இலங்கை பாதுகாப்பில் புதிய வழிகள் அடையாளம் SamugamMedia இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்யும் மற்றும் ஈடுபாட்டிற்கான புதிய வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இந்திய மற்றும் இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் வருடாந்த உரையாடலின் ஏழாவது பதிப்பை நடத்தியவேளையில் இந்த புதிய வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வருடாந்த பாதுகாப்பு உரையாடலின் 7 வது பதிப்பின் இரண்டு நாள் கூட்டம், கடந்த வியாழக்கிழமை புதுதில்லியில் ஆரம்பித்து நேற்று சனிக்கிழமை நிறைவடைந்தது.இந்திய தரப்புக்கு பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அர்மானேயும் இலங்கை தரப்புக்கு பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவும்  தலைமை தாங்கினர்.இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின்போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பும் ஆய்வு செய்ததாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.தற்போது நடைபெற்று வரும் பல்வேறு பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்முயற்சிகள் கூட்டாக மதிப்பாய்வு செய்யப்பட்டு, ஈடுபாட்டிற்கான புதிய வழிகளும் இதன்போது அடையாளம் காணப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement