• May 12 2024

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்! மார்ச் 08, 09 இலங்கை குறித்து கலந்துரையாடல் SamugamMedia

Chithra / Feb 26th 2023, 9:16 am
image

Advertisement

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52வது கூட்டத்தொடர  நாளை 27 ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. 

மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.  

மார்ச் மாதம் 8 ஆம் திகதியும் 9 ஆம் திகதியும் இலங்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, இம்முறை ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ளவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 


இலங்கை சார்பில் அதிகாரிகள் குழுவொன்று ஜெனிவா செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சட்டமா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகரிகள் குழுவொன்று இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இலங்கை தொடர்பான பிரேரணைகள் ஆம்முறை கொண்டுவரப்படமாட்டாது எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் மார்ச் 08, 09 இலங்கை குறித்து கலந்துரையாடல் SamugamMedia ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52வது கூட்டத்தொடர  நாளை 27 ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.  மார்ச் மாதம் 8 ஆம் திகதியும் 9 ஆம் திகதியும் இலங்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.இதேவேளை, இம்முறை ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ளவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கை சார்பில் அதிகாரிகள் குழுவொன்று ஜெனிவா செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார்.சட்டமா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகரிகள் குழுவொன்று இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கை தொடர்பான பிரேரணைகள் ஆம்முறை கொண்டுவரப்படமாட்டாது எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement