• Nov 23 2024

பலத்த பாதுகாப்புடன் கிறிஸ்தவ ஆலயங்களில் இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள்..!

Chithra / Jan 1st 2024, 9:16 am
image

புதுவருட பிறப்பினை வரவேற்கும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.

மன்னார்







புத்தாண்டு பிறப்பு நள்ளிரவு திருப்பலி மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இடம் பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர்  இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து விசேட  ஆராதனைகள் நடைபெற்றது. 

புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியை முன்னிட்டு தேவாலயத்தில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

இதன் போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு

இதேவேளை  மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் பேராலயமாக உள்ள மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட பேராயர் அருட்திரு ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தையினால் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

இதன்போது பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.

திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.

புதுவருட ஆராதனையின்போது ஆலயத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.


புத்தளம் 

இந்நிலையில் புத்தளம் புனித சாந்த மரியா ஆலயத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் புதுவருட ஆராதனைகள் இடம்பெற்றன.

ஆலய அருட்தந்தை சுசிரு ப்ரஷான் தலைமையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.

இதன்போது ஆலயங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பொலிஸ் மற்றும் இராணுவம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.



பலத்த பாதுகாப்புடன் கிறிஸ்தவ ஆலயங்களில் இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள். புதுவருட பிறப்பினை வரவேற்கும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.மன்னார்புத்தாண்டு பிறப்பு நள்ளிரவு திருப்பலி மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இடம் பெற்றது.மன்னார் மறைமாவட்ட ஆயர்  இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.அதனை தொடர்ந்து விசேட  ஆராதனைகள் நடைபெற்றது. புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியை முன்னிட்டு தேவாலயத்தில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.இதன் போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்புஇதேவேளை  மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் பேராலயமாக உள்ள மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.மட்டக்களப்பு மாவட்ட பேராயர் அருட்திரு ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தையினால் ஒப்புக்கொடுக்கப்பட்டன.இதன்போது பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.புதுவருட ஆராதனையின்போது ஆலயத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.புத்தளம் இந்நிலையில் புத்தளம் புனித சாந்த மரியா ஆலயத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் புதுவருட ஆராதனைகள் இடம்பெற்றன.ஆலய அருட்தந்தை சுசிரு ப்ரஷான் தலைமையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.இதன்போது ஆலயங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பொலிஸ் மற்றும் இராணுவம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement