• Apr 20 2024

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி! SamugamMedia

Chithra / Mar 13th 2023, 12:58 pm
image

Advertisement

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி கிறிஸ்ட்சேர்சில் ஆரம்பமான இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 355 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் 373 ஓட்டங்களைப் பெற்று 18 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

இந்தநிலையில், இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய இலங்கை 302 ஓட்டங்களை பெற்று, 285 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

இரண்டாவது இன்னிங்ஸுக்காக இலங்கை அணி சார்பில் அதிகபடியாக எஞ்சலோ மெத்தியூஸ் 112 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ப்ளேர் டிக்னர் 4 விக்கெட்டுகளையும், மெட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த நிலையில், வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாடிய நியூஸிலாந்து, அணி வெற்றி இலக்கை அடைந்தது.


துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸன் ஆட்டமிழப்பின்றி 121 ஓட்டங்களையும், டேரில் மிட்செல் 81 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஹசித பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் வீரராக டேரில் மிட்செல் (102 மற்றும் 81 ஓட்டங்கள்) தெரிவானார்.

இந்தநிலையில், 2 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1 - 0 என நியூஸிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

இதேவேளை, இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, வெல்லிங்டனில், எதிர்வரும் 17 முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி SamugamMedia இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.கடந்த 9 ஆம் திகதி கிறிஸ்ட்சேர்சில் ஆரம்பமான இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.அதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 355 ஓட்டங்களை பெற்றது.பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் 373 ஓட்டங்களைப் பெற்று 18 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.இந்தநிலையில், இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய இலங்கை 302 ஓட்டங்களை பெற்று, 285 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸுக்காக இலங்கை அணி சார்பில் அதிகபடியாக எஞ்சலோ மெத்தியூஸ் 112 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ப்ளேர் டிக்னர் 4 விக்கெட்டுகளையும், மெட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.இந்த நிலையில், வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாடிய நியூஸிலாந்து, அணி வெற்றி இலக்கை அடைந்தது.துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸன் ஆட்டமிழப்பின்றி 121 ஓட்டங்களையும், டேரில் மிட்செல் 81 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஹசித பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.போட்டியின் வீரராக டேரில் மிட்செல் (102 மற்றும் 81 ஓட்டங்கள்) தெரிவானார்.இந்தநிலையில், 2 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1 - 0 என நியூஸிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.இதேவேளை, இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, வெல்லிங்டனில், எதிர்வரும் 17 முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement