• Apr 22 2025

பிரபல வர்த்தகரை சுட்டுக் கொலை செய்யத் திட்டமிட்ட 9 பேர் ஆயுதங்களுடன் கைது!

Chithra / Apr 20th 2025, 11:21 am
image

 

கொலைக் குற்றமொன்றை மேற்கொள்வதற்காகத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தயார்நிலையில் இருந்த 6 பேரும், அவர்களுக்கு உதவிய மேலும் 3 பேரும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்கள் வர்த்தகரான கம்பஹா ஒஸ்மன் குணசேகர உள்ளிட்ட குழுவினரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரியவருகின்றது. 

தமக்குக் கிடைத்த தகவலொன்றுக்கமைய, நேற்று குறித்த அதிகாரிகள் கம்பஹா - வத்துமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்டுள்ளனர். 

அங்கிருந்து, இரண்டு ரீ 56 துப்பாக்கிகள், 118 தோட்டாக்கள், 3 மெகசின்கள் மற்றும் 3 வாகனங்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன், 

அவர்கள் இருவரையும் குறித்த குற்றக்கும்பலுக்கு அறிமுகப்படுத்திய திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவரும் 4 கைபேசிகளுடன் குருநாகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பிரபல வர்த்தகரை சுட்டுக் கொலை செய்யத் திட்டமிட்ட 9 பேர் ஆயுதங்களுடன் கைது  கொலைக் குற்றமொன்றை மேற்கொள்வதற்காகத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தயார்நிலையில் இருந்த 6 பேரும், அவர்களுக்கு உதவிய மேலும் 3 பேரும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் வர்த்தகரான கம்பஹா ஒஸ்மன் குணசேகர உள்ளிட்ட குழுவினரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரியவருகின்றது. தமக்குக் கிடைத்த தகவலொன்றுக்கமைய, நேற்று குறித்த அதிகாரிகள் கம்பஹா - வத்துமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்டுள்ளனர். அங்கிருந்து, இரண்டு ரீ 56 துப்பாக்கிகள், 118 தோட்டாக்கள், 3 மெகசின்கள் மற்றும் 3 வாகனங்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் இருவரையும் குறித்த குற்றக்கும்பலுக்கு அறிமுகப்படுத்திய திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவரும் 4 கைபேசிகளுடன் குருநாகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement