• Nov 16 2024

பொதுத் தேர்தல் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை..! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

Chithra / May 27th 2024, 10:37 am
image

 

இந்த ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தேர்தல்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள்  ஆணைக்குழுவின் பிரதானி ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் தேர்தலுக்காக பத்து பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிதியானது முழுக்க முழுக்க ஜனாதிபதி தேர்தலை நடத்தும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடத்துவதற்காக நிதியை ஒதுக்கீடு செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் மட்டுமே இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு  இந்த ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தேர்தல்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எனினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள்  ஆணைக்குழுவின் பிரதானி ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.இந்த ஆண்டில் தேர்தலுக்காக பத்து பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குறித்த நிதியானது முழுக்க முழுக்க ஜனாதிபதி தேர்தலை நடத்தும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடத்துவதற்காக நிதியை ஒதுக்கீடு செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியினால் மட்டுமே இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement