• Nov 26 2024

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக பணம் ஒதுக்கப்படவில்லை - ரணிலின் கூற்றை மறுக்கும் பிரதமர்

Chithra / Oct 28th 2024, 3:07 pm
image

 

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக இதற்கு முன்னர் இருந்த அரசாங்கத்தினால் நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

பாதுக்க பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் உறுதியளித்த போதிலும் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் வினைத்திறன் மிக்க அரச சேவையொன்று உருவாக்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, நீர்கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக்கு தேவையான ஒதுக்கீடுகளை செய்திருந்ததாக மீண்டும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக பணம் ஒதுக்கப்படவில்லை - ரணிலின் கூற்றை மறுக்கும் பிரதமர்  அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக இதற்கு முன்னர் இருந்த அரசாங்கத்தினால் நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாதுக்க பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் உறுதியளித்த போதிலும் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, தமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் வினைத்திறன் மிக்க அரச சேவையொன்று உருவாக்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது உறுதியளித்துள்ளார்.இதேவேளை, நீர்கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக்கு தேவையான ஒதுக்கீடுகளை செய்திருந்ததாக மீண்டும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement