• May 03 2024

சட்டங்களில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை..! ஊழல்வாதிகளுக்கு எதிராக 24 மணி நேரத்தில் நடவடிக்கை..! பொன்சேகா சூளுரை..!samugammedia

Sharmi / Jul 10th 2023, 10:40 am
image

Advertisement

நாட்டில் உள்ள சட்டங்களில் எந்தவித பிரச்னையும் இல்லை. புதிதாக சட்டங்களை கொண்டு வரவேண்டிய தேவையும் கிடையாது. எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் 24 மணித்தியாலங்களுக்குள் நடைமுறையில் உள்ள சட்டங்களை பயன்படுத்தி ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மக்கள் புரட்சியை நோக்கி நிராயுதபாணியான கட்சி சார்பற்ற போராட்டம் என்ற தொனிப்பொருளில் கம்பஹா யக்கல பகுதியில் செயற்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவை 'திருடன்' என கூறினார்.

ரணிலை ராஜபக்ஷ 'திருடன்' என்றார். இந்த திருடர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தில் உள்ளனர். ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பில் பேசப்படுகிறது. 10 தேங்காய்களை திருடியவர் இரண்டு வருடங்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என்றால் கோடிக்கணக்கிலும் பில்லியன் கணக்கிலும் திருடியவர்களை குறைந்தது ஒருவருட காலமேனும் சிறைக்கு அனுப்ப வேண்டும்.

நாட்டில் உள்ள சட்டங்களில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. புதிதாக சட்டங்களை கொண்டு வர வேண்டிய தேவை கிடையாது. எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டால்24 மணித்தியாலங்களில் நடைமுறையில் உள்ள சட்டங்களை பயன்படுத்தி, ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 


சட்டங்களில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. ஊழல்வாதிகளுக்கு எதிராக 24 மணி நேரத்தில் நடவடிக்கை. பொன்சேகா சூளுரை.samugammedia நாட்டில் உள்ள சட்டங்களில் எந்தவித பிரச்னையும் இல்லை. புதிதாக சட்டங்களை கொண்டு வரவேண்டிய தேவையும் கிடையாது. எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் 24 மணித்தியாலங்களுக்குள் நடைமுறையில் உள்ள சட்டங்களை பயன்படுத்தி ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.மக்கள் புரட்சியை நோக்கி நிராயுதபாணியான கட்சி சார்பற்ற போராட்டம் என்ற தொனிப்பொருளில் கம்பஹா யக்கல பகுதியில் செயற்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவை 'திருடன்' என கூறினார்.ரணிலை ராஜபக்ஷ 'திருடன்' என்றார். இந்த திருடர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தில் உள்ளனர். ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பில் பேசப்படுகிறது. 10 தேங்காய்களை திருடியவர் இரண்டு வருடங்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என்றால் கோடிக்கணக்கிலும் பில்லியன் கணக்கிலும் திருடியவர்களை குறைந்தது ஒருவருட காலமேனும் சிறைக்கு அனுப்ப வேண்டும்.நாட்டில் உள்ள சட்டங்களில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. புதிதாக சட்டங்களை கொண்டு வர வேண்டிய தேவை கிடையாது. எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டால்24 மணித்தியாலங்களில் நடைமுறையில் உள்ள சட்டங்களை பயன்படுத்தி, ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement