• Apr 06 2025

சாய்ந்தமருது பிரதேசத்தில் தொற்றாநோய்ப் பரிசோதனைகள் முன்னெடுப்பு

Thansita / Apr 5th 2025, 9:08 am
image

சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு தொற்றா நோய்ப் பரிசோதனை நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹீலா இஸ்ஸதீன் ஆலோசனைக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்.ஜே. மதன் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு தொற்றா நோய்ப் பரிசோதனை சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதன் போது 153க்கு மேற்பட்டவர்களுக்கு குருதிச் சீனி பரிசோதனை (ரேண்டம் சுகர் டெஸ்ட்) மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரீன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


சாய்ந்தமருது பிரதேசத்தில் தொற்றாநோய்ப் பரிசோதனைகள் முன்னெடுப்பு சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு தொற்றா நோய்ப் பரிசோதனை நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹீலா இஸ்ஸதீன் ஆலோசனைக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்.ஜே. மதன் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு தொற்றா நோய்ப் பரிசோதனை சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.இதன் போது 153க்கு மேற்பட்டவர்களுக்கு குருதிச் சீனி பரிசோதனை (ரேண்டம் சுகர் டெஸ்ட்) மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரீன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement