• Nov 26 2024

வட மாகாண அரச சாரதிகள் தொடந்து நான்காவது நாளாகவும் போராட்டத்தில்!

Tamil nila / Jun 6th 2024, 11:10 pm
image

வட மாகாண அரசு சாரதிகள் சங்கம், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் முன்பாக தொடர்ந்து நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் 5வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்திற்கு பிரதிப் பிரதம செயலாளரால், கடந்த வருடம் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.

ஆளுநரின் கோரிக்கை அமைய பின்னர் அந்த இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் ஏமாற்றம் அடைந்த அரச சாரதிகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர். 

அதனைத் தொடர்ந்து இடை நிறுத்தப்பட்ட இடமாற்றம், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி பிரதமர் செயலர் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கி இருந்தார்.

குறித்த திகதி வரை இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அரச சாரதிகள் சங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



வட மாகாண அரச சாரதிகள் தொடந்து நான்காவது நாளாகவும் போராட்டத்தில் வட மாகாண அரசு சாரதிகள் சங்கம், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் முன்பாக தொடர்ந்து நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.வடக்கு மாகாணத்தில் 5வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்திற்கு பிரதிப் பிரதம செயலாளரால், கடந்த வருடம் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.ஆளுநரின் கோரிக்கை அமைய பின்னர் அந்த இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.இதனால் ஏமாற்றம் அடைந்த அரச சாரதிகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர். அதனைத் தொடர்ந்து இடை நிறுத்தப்பட்ட இடமாற்றம், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி பிரதமர் செயலர் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கி இருந்தார்.குறித்த திகதி வரை இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அரச சாரதிகள் சங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement