• Nov 26 2024

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு..!

Sharmi / Nov 4th 2024, 8:39 am
image

வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 'பி' பிரிவின் கீழ் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்  குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, இந்த தொகைக்கு மேலதிகமாக, நவம்பர் மாத இறுதிக்குள் சுமார் 100,000 கடவுச்சீட்டுகளும், டிசம்பரில் 150,000 கடவுச்சீட்டுகளும் மொத்தமாக 750,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பெறப்படும் என தெரிவித்துள்ளது.

அத்துடன்,  மற்றொரு தொகுதி கடவுச்சீட்டு வாங்கும் பணியும் தொடங்கியுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 1,600 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, டிசம்பர் தொடக்கத்தில் இந்தத் தொகை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்கள் கோரும் கடவுச்சீட்டுகளின் அளவுக்கேற்ப கடவுச்சீட்டு வழங்கும் முறை மாற்றியமைக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தற்போது இணைய வழியின் ஊடாக திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதற்கான அமைப்பை தயார் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் அந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு. வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 'பி' பிரிவின் கீழ் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்  குறிப்பிட்டுள்ளது.அதேவேளை, இந்த தொகைக்கு மேலதிகமாக, நவம்பர் மாத இறுதிக்குள் சுமார் 100,000 கடவுச்சீட்டுகளும், டிசம்பரில் 150,000 கடவுச்சீட்டுகளும் மொத்தமாக 750,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பெறப்படும் என தெரிவித்துள்ளது.அத்துடன்,  மற்றொரு தொகுதி கடவுச்சீட்டு வாங்கும் பணியும் தொடங்கியுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதற்கமைய, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 1,600 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, டிசம்பர் தொடக்கத்தில் இந்தத் தொகை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்கள் கோரும் கடவுச்சீட்டுகளின் அளவுக்கேற்ப கடவுச்சீட்டு வழங்கும் முறை மாற்றியமைக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தற்போது இணைய வழியின் ஊடாக திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதற்கான அமைப்பை தயார் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.எதிர்வரும் காலங்களில் அந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement